Enter your Email Address to subscribe to our newsletters



கோவை, 26 அக்டோபர் (ஹி.ச.)
தமிழக அரசின் சென்னையில் தலைமை பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் கோவையில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 2025 அன்று தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் உங்களை டிஜிட்டல் கைது செய்து உள்ளோம் என்றும், உங்கள் வங்கிக் கணக்கில் பண பரிவர்த்தனை நடந்து உள்ளதாக கூறி உள்ளனர்.
அதிர்ச்சி அடைந்தவர் என் மீது தவறில்லை எனக் கூறி உள்ளார். இதைத் தொடர்ந்து அந்த மர்ம ஆசாமி உங்கள் இந்தியன் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை ஹெச்.டி.எஃப்.சி என்ற வங்கிக் கணக்கிற்கு அனுப்புங்கள் சரியாக இருந்தால் திருப்பி அனுப்புகிறோம் என்று கூறி மிரட்டி உள்ளனர்.
இதை அடுத்து அவர் வங்கியில் இருந்த ஓய்வு வாங்கிய பணம் ரூபாய் 29,88.000/- அவர்கள் கூறிய வங்கிக் கணக்கிற்கு அனுப்பி உள்ளார். பின்னர் அந்த பணம் மீண்டும் அவருக்கு வராததால், அவருக்கு வந்த அலைபேசி எண்ணுக்கு மீண்டும் தொடர்பு கொண்ட போது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தவர் கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினரிடம் புகார் அளித்தார்.
வழக்கு பதிவு செய்த கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர். அந்தப் பணத்தில் இருந்து ஆறு லட்ச ரூபாயை அந்த மோசடி கும்பல் எடுத்து உள்ளது விசாரணையில் தெரிய வந்தது. இதனை அடுத்து ஆறு லட்ச ரூபாய் பணத்தை எடுத்த நபரிடம் நடத்திய விசாரணையில், அவர் கேரளா மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த நபீல் என்பதும், அவருடன் ஹரிஷ் என்ற குட்டாஸ் மற்றும் முகமத் ராமீஸ் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை கைது செய்த காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும் இதில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்து விசாரணை நடத்தி தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
டிஜிட்டல் கைது என்று ஓய்வு பெற்ற தலைமை பொறியாளரிடம் கோவையில் 29.8 லட்ச ரூபாய் மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Hindusthan Samachar / V.srini Vasan