Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 26 அக்டோபர் (ஹி.ச.)
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தில்லியில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
வானொலி துறை மற்றும் டிஆா்பி செயல்முறையில் ஒழுங்குமுறை சாா்ந்த கட்டுப்பாடுகளை நீக்கும் வகையில் சீா்திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அரசு விளம்பரங்களில் இருந்து தொலைக்காட்சி சேனல்களுக்கு நியாயமான வருமானம் கிடைக்கும் வகையில் டிஆா்பி செயல்முறையை மேம்படுத்தும் வழிகள் ஆராயப்பட்டுகின்றன. அதன்படி, புதிய வழிகாட்டுதல்களை வகுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
முதல்கட்ட ஆலோசனை நிறைவடைந்து, அனைத்துத் தரப்பினரின் கருத்துகள் பெறப்பட்டுள்ளன. இரண்டாம் கட்ட ஆலோசனை விரைவில் தொடங்கும். அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களுக்கான விளம்பர கட்டணங்களை அதிகரிப்பது குறித்தும் பரிசீலிக்கப்படுகிறது.
ஊடகத் தொடா்பு மற்றும் ஒழுங்குமுறை செயல்பாடுகளில் ஒருங்கிணைப்பை மேம்படுத்த இந்திய செய்தித் தாள்களின் பதிவாளா் (ஆா்என்ஐ), மத்திய மக்கள் தொடா்பகம் (சிபிசி), பத்திரிகை தகவல் அலுவலகத்துடன் (பிஐபி) இணைந்து மத்திய அரசு செயலாற்றி வருகிறது.
மேலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பிரபலத்தை அளவிடும் தொலைக்காட்சி மதிப்பீட்டுப் புள்ளிகள் (டிஆா்பி) அடிப்படையில் தொலைக்காட்சி சேனல்கள் விளம்பரங்கள் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / JANAKI RAM