கன்னியாகுமரியில் எம்ஜிஆர் சிலையை சேதப்படுத்திய நபர்களை கண்டு பிடித்து தண்டனை வழங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
சென்னை, 26 அக்டோபர் (ஹி.ச.) கன்னியாகுமரியில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் உருவச்சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியதற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் கண்டனப்பதிவை பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட
Eps


Tweet


சென்னை, 26 அக்டோபர் (ஹி.ச.)

கன்னியாகுமரியில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் உருவச்சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியதற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் கண்டனப்பதிவை பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், பார்வதிபுரம் சந்திப்பில் அமைந்துள்ள மறைந்த முதலமைச்சர், கழக நிறுவனர், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களது திருவுருவச்சிலையின் கை பகுதியினை நேற்று இரவு (25.10.2025) சில விஷமிகள் சேதப்படுத்தியுள்ளனர்.

எங்களது இதயதெய்வம், புரட்சித்தலைவரின் திருவுருவச் சிலையினை சேதப்படுத்தியவர்களுக்கும், பின்னணியில் உள்ள மறைமுக எதிரிகளுக்கும் எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

இதுகுறித்து காவல்துறை விரைந்து விசாரணை மேற்கொண்டு தவறிழைத்தவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ