மழைநீரில் மூழ்கி சேதமடைந்த நெற்பயிருக்கு இழப்பீடு கேட்டு விவசாயிகள் கோரிக்கை
கிருஷ்ணகிரி, 26 அக்டோபர் (ஹி.ச.) கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அகரம் அடுத்த ஆவத்துவாடி கிராமத்தில் 1000ஏக்கருக்கும் மேல் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். அந்த நிலையில் இதே கிராமத்தை சேர்ந்தவர் முருகன்(55) இவர் தனது நிலத்தில் 5
Paddy affect


கிருஷ்ணகிரி, 26 அக்டோபர் (ஹி.ச.)

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அகரம் அடுத்த ஆவத்துவாடி கிராமத்தில் 1000ஏக்கருக்கும் மேல் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். அந்த நிலையில் இதே கிராமத்தை சேர்ந்தவர் முருகன்(55) இவர் தனது நிலத்தில் 5 ஏக்கர் நெல் சாகுபடி செய்துள்ளார்.

இன்னும் ஒரு வாரத்தில் முற்றிய நெற்கதிர்களை அறுவடை செய்ய இருந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கனமழை மற்றும் காற்றின் வேகம் தாங்மல் நெற்கதீர்கள் நிலத்தில் சாய்ந்து சேதமானது. இந்த நிலையில் மழை நின்று விட்ட நிலையில் நிலத்தில் நீர் வடியாததால் நெற்கதிர்கள் அழுகி வருகின்றன.

மேலும் இதே போல் இந்த பகுதியில் பல விவசாயிகளின் நெற்பயிர்கள் சேதாகி உள்ளன. இதை அதிகரிகள் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகளின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் ஆவத்துவாடி பகுதியில் உள்ள பாசனத்திற்கு வரும் தண்ணீர் கால்வாயில் செடிகொடிகள் படர்ந்து உள்ளதால் தண்ணீர் கால்வாயில் செல்ல முடியாமல் பயிரிடப்பட்ட நெற்பயிர்களில் புகுந்து நெற்கதிகள் சேதமாகி வருகிறது.

வரும் நாட்களில் மீண்டும் மழை பெய்தால் விவசாயிகள் பயிரிடபட்ட நெற்கதீர்கள் சேதமாகும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

உடனடியாக சம்மந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கால்வாயில் படர்ந்துள்ள செடிகளை அகற்றி தூர்வார வேண்டும் நிற்பதற்கு உரிய நிவாரணம் மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN