Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 26 அக்டோபர் (ஹி.ச.)
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான நேரடி விமானங்கள் ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று (அக் 26) முதல் மீண்டும் தொடங்குகின்றன.இரு நாடுகளுக்கும் இடையிலான முதல் விமானம் இன்று இரவு 10 மணிக்கு புறப்பட உள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான நேரடி விமானங்களை மீண்டும் தொடங்குவது மக்களிடையேயான பரிமாற்றங்களை அதிகரிப்பதற்கான ஒரு நேர்மறையான நடவடிக்கை என்று சீனா ஏற்கனவே கூறியிருந்தது.
அதன்படி கொல்கத்தா-குவாங்சோ இடையேயான இண்டிகோ விமானம் இன்று புறப்பட உள்ளது. ஷாங்காயிலிருந்து புது டெல்லிக்கு விமானங்கள் நவம்பர் 9 ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கும். இதற்கிடையில், இண்டிகோவின் டெல்லி முதல் குவாங்சோ வரையிலான விமானம் நவம்பர் 10 ஆம் தேதி தொடங்கும்.
இந்தியாவில் உள்ள சீனத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் யூ ஜிங் இன்று தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே நேரடி விமானங்கள் இயங்க உள்ளன. கொல்கத்தா → குவாங்சோ இன்று தொடங்குகிறது. ஷாங்காய் ↔ புது தில்லி நவம்பர் 9 ஆம் தேதி தொடங்குகிறது, வாரத்திற்கு 3 முறை இந்த விமானங்கள் பயணம் மேற்கொள்ளவுள்ளன என்று கூறியுள்ளார்.
2020 ஆம் ஆண்டு கோவிட்-19 தொற்றுநோயைத் தொடர்ந்து inthiyaa-சீனா இடையிலான விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. கிழக்கு லடாக்கில் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக எல்லை மோதல் ஏற்பட்டதால் அவை மீண்டும் தொடங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b