7 வயது சிறுவனின் மருத்துவ சிகிச்சைக்கு இந்திய கடற்படை உதவி
கொச்சி, 26 அக்டோபர் (ஹி.ச.) லட்சத்தீவின் அகாட்டித் தீவில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுவனுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். இதனையடுத்து அந்த சிறுவனை மருத்துவமனையில் அனுமதிக்க வேண
7 வயது சிறுவனின் மருத்துவ சிகிச்சைக்கு இந்திய கடற்படை உதவி


கொச்சி, 26 அக்டோபர் (ஹி.ச.)

லட்சத்தீவின் அகாட்டித் தீவில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுவனுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

இதனையடுத்து அந்த சிறுவனை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என லட்சத்தீவு நிர்வாகம் சார்பில் இந்திய கடற்படைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனையடுத்து ஐஎன்எஸ் கருடா போர்க்கப்பலில் இருந்து விமானம் ஒன்று, மோசமான வானிலையை பொருட்படுத்தாமல் சிறுவனின் சிகிச்சைக்காக உதவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுவன் மற்றும் அவரது பெற்றோரும் அந்த விமானம் மூலம் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இத்தகவலை இன்று

(அக் 26) தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள இந்திய கடற்படை, நாட்டிற்கு சேவை ஆற்றுவதில் தங்களுக்கு உள்ள உறுதிப்பாட்டை காட்டுவதாக தெரிவித்துள்ளது.

என அந்த பதிவில் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b