Enter your Email Address to subscribe to our newsletters

கள்ளக்குறிச்சி, 26 அக்டோபர் (ஹி.ச.)
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள வட பொன்பரப்பி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மேல்சிறுவள்ளூர் சாத்தனூர் டேம் வாக்கியாமேட்டில் காவல் உதவி ஆய்வாளர் சலாம் உசேன் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை மறித்து சோதனை செய்து விசாரணை செய்தபோது முன்னுக்கு பின்னாக தகவல் அளித்துள்ளனர்.
இதனால் இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்த போது திருவண்ணாமலை மாவட்டம் இளையாங்கன்னி கிராமத்தைச் சேர்ந்த சுபாஷ் என்கின்ற சகாயராஜ் என்பதும் அவரது உறவினரான விரியூர் கிராமத்தைச் சார்ந்த அல்போன்ஸ் பிரிட்டோ என்பதும் தெரியவந்தது.
இருவரையும் விசாரணை செய்த போது வன விலங்குகளை வேட்டையாட பயன்படுத்திய நாட்டுத் துப்பாக்கி என தெரியவந்தது.
இதனையடுத்து நாட்டுத் துப்பாக்கி மற்றும் வேட்டையாட பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தும், சுபாஷ் மற்றும் அல்போன்ஸ் பிரிட்டோ ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN