Enter your Email Address to subscribe to our newsletters

கள்ளக்குறிச்சி, 26 அக்டோபர் (ஹி.ச.)
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு படிக்கக்கூடிய பள்ளி சிறுமி ஒருவர் இயற்கை உபாதை கழிப்பதற்கு சென்று உள்ளார்.
அப்போது அங்கிருந்த வெங்கடேசன்(48) என்பவர் பள்ளி சிறுமியை பின்தொடர்ந்து சென்று அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். மேலும் சம்பவம் குறித்து யாரிடமாவது தெரிவித்தால் கொலை செய்துவிடுவேன் என சிறுமியை மிரட்டியதாக சொல்லப்படுகின்றது.
இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்த நிலையில், சிறுமியின் பெற்றோர் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வெங்கடேசனை(48) கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இயற்கை உபாதை கழிக்க சென்ற ஏழாம் வகுப்பு படிக்கக்கூடிய பள்ளி சிறுமியிடம் 48 வயது நபர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN