Enter your Email Address to subscribe to our newsletters

திருச்செந்தூர், 26 அக்டோபர் (ஹி.ச.)
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழா ஏற்பாடுகளை கனிமொழி எம்.பி.அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் ரவிசந்திரன், மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத், எஸ்.பி. ஆல்பர்ட் ஜான், கோயில் தக்கார் ரா. அருள்முருகன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கொட்டகைகளில் தங்கி விரதம் மேற்கொண்டுள்ள பக்தர்களுக்கு ஏதேனும் குறைகள் உள்ளதா எனவும் அவர் கேட்டறிந்தார்.
பின்னர், கோயில் கடற்கரையில் சூரசம்ஹாரம் நடக்கும் இடத்தில் 5 அடுக்கு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதையும் பார்வையிட்டு விவரங்களை கேட்டறிந்தார்.
கடற்கரையில் போலீசார் கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள 10 டவர்கள், 10 இடங்களில் சூரசம்ஹார நிகழ்ச்சியை நேரலை செய்ய அமைக்கப்பட்டுள்ள எல்இடி திரைகள், கோயில் வளாகத்தில் 100க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்க செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் ஆகியவை குறித்தும் அவர் கேட்டறிந்தார்.
பின்னர், அதிகாரிகளுடன் நடந்த ஆலோனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட கனிமொழி எம்.பி. முன்னெச்சரிக்கையாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுரை வழங்கினார்.
திருச்செந்தூர் கோட்டாட்சியர் கௌதம், டிஎஸ்பி மகேஷ்குமார், தூத்துக்குடி மேயர் ஜெகன், வட்டாட்சியர் தங்கமாரி, நகராட்சி தலைவர் சிவ ஆனந்தி, துணைத் தலைவர் செங்குழி ரமேஷ், ஆணையாளர் ஈழவேந்தன், மாவட்ட அறங்காவலர் வாள் சுடலை, பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / Durai.J