Enter your Email Address to subscribe to our newsletters

சிவகங்கை, 26 அக்டோபர் (ஹி.ச.)
சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2 ஏக்கர் பரப்பில் 31 ஆயிரம் சதுர அடியில் சுமார் 18 கோடியே 43 லட்ச ரூபாய் செலவில் பாரம்பரிய செட்டிநாடு கட்டட வடிவில் உருவாக்கப்பட்ட கீழடி அருங்காட்சியகத்தை பொது மக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர்.
தமிழக தொல்லியல் துறை கீழடி அகழாய்வு தளத்தில் 2018ம் ஆண்டு முதல் தொடர்ந்து ஐந்து கட்டங்களாக அகழாய்வு மேற்கொண்டு வருகிறது. அகழாய்வுகள் மூலம் கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட தொல் பொருட்களை உலகத் தமிழர்கள், பொதுமக்கள் காணும் வகையில் தமிழக மரபுசார் கட்டடக்கலை அடிப்படையில், கீழடி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
கீழடி அருங்காட்சியகத்தில் 'மதுரையும் கீழடியும்', 'வேளாண்மையும் நீர் மேலாண்மையும்', 'கலம் செய்கோ', 'ஆடையும் அணிகலன்களும்', 'கடல் வழி வணிகம்', 'வாழ்வியல்' என்னும் 6 தலைப்பின் அடிப்படையில் தனித்தனி கட்டிடங்களில் தொல்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இப்பொருட்களை காண தினசரி இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையி நாளை(அக் 27), அக்.28, 30ம் தேதிகளில் கீழடி அருங்காட்சியகத்துக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது.
மருதுபாண்டியர் குருபூஜை, தேவர் குருபூஜையையொட்டி கீழடி அருங்காட்சியகத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b