Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 26 அக்டோபர் (ஹி.ச.)
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது,
டாஸ்மாக்கில் இருக்கும் மதுபானங்களை தமிழக அரசு சிசிடிவி கேமரா மற்றும் காவலர்கள் மூலமாக பெரிய கிடங்கில் வைத்து பாதுகாக்கிறது. ஆனால் உயிருக்கு அத்தியாவசியமாக இருக்கும் 20 லட்சம் டன் நெல்களை சாலையிலும், சுடுகாட்டிலும் கொட்டி வீணடித்து விட்டது.
மக்களுக்கு சேவை செய்ய கருதாதவன் கையில், ஆட்சி அதிகாரம் இருந்தால் மக்களின் கனவு மற்றும் நலன்கள் கேள்விக்குறியாக தான் இருக்கும் முத்துராமலிங்கத் தேவர் அப்போதே கூறியுள்ளார்
இங்கு விளையக்கூடிய நெல்லை வீணடித்து விட்டு, ஆந்திரா மற்றும் குஜராத்தில் இருந்து அரிசிகளை தமிழக அரசு வாங்குகிறது. அதுதான் திமுக அரசின் சாதனை என்று கண்டித்து பேசினார்.
தொடர்ந்து கரூர் துயரத்தில் பாதிக்கப்பட்டவர்களை விஜய் சந்திப்பது என்பது அவரின் விருப்பம்.
கரூர் துயரத்தை பற்றி மட்டுமே பேசுவதை நான் விரும்பவில்லை.
பேசுவதற்கு அதை தாண்டி நிறைய பிரச்சினைகள் இருக்கிறது என்று காட்டமாக தெரிவித்தார்.
Hindusthan Samachar / ANANDHAN