Enter your Email Address to subscribe to our newsletters

ஜெய்ப்பூர், 26 அக்டோபர் (ஹி.ச.)
ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் உள்ள கன்கரியா என்ற பகுதியில் மிகப்பெரிய தங்க சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த கண்டுபிடிப்பு இந்தியாவிற்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே பன்ஸ்வாரா மாவட்டத்தில் உள்ள ஜக்புரா மற்றும் புகியா ஆகிய இடங்களில் தங்க சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள கன்கரியா சுரங்கத்தில் சுமார் 3 கி.மீ. நீளத்திற்கு, 110 மில்லியன் டன்களுக்கும் அதிகமான தாதுக்கள் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதில் 222 டன் தூய தங்கம் அடங்கும். ராஜஸ்தானில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட சுரங்கங்களில் இதுவே அதிக தங்க இருப்பு கொண்ட சுரங்கமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த கண்டுபிடிப்பால் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் எனவும், இந்தியாவின் தங்கத் தேவையில் 25 சதவீதம் பூர்த்தி ஆகக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / JANAKI RAM