மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச பேட்மிட்டன் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர்கள் - நயினார் நாகேந்திரன் பாராட்டு!
சென்னை, 26 அக்டோபர் (ஹி.ச.) ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்தோர் பத்து பதக்கங்களுக்கு மேல் வென்றுள்ள நிலையில், அவர்களை பாராட்டு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்
Nainar Nagenthran


Tweet


சென்னை, 26 அக்டோபர் (ஹி.ச.)

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்தோர் பத்து பதக்கங்களுக்கு மேல் வென்றுள்ள நிலையில், அவர்களை பாராட்டு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

ஆஸ்திரேலிய நாட்டின் விக்டோரியா நகரில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேச பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த திரு. சிவராஜன், செல்வி. சாருமதி, திரு. சுதர்சன், திரு. ருத்திக், திரு. ஜெகதீஷ் மற்றும் திரு. தினேஷ் ஆகியோர், 6 தங்கப்பதக்கங்கள் உட்பட 10 பதக்கங்களை வென்று சாதனை படைத்திருப்பது மட்டற்ற மகிழ்ச்சியளிக்கிறது.

முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்பதை உலகிற்கு உணர்த்தியதுடன், நமது பாரதத்தின் மணிமகுடத்திற்கு மேலும் பல பதக்கங்களைப் பரிசளித்துள்ள நமது தமிழக மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர்கள் வாழ்வில் மென்மேலும் சிறந்து விளங்கிட எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ