Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 26 அக்டோபர் (ஹி.ச.)
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 'மனதின் குரல்' என்ற பெயரில் ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையும் அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார்.
அந்த வகையில் இன்று
(அக் 26) மன்கிபாத் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
மன்கிபாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
சமூகத்தின் ஒற்றுமையை சாத் பண்டிகை பிரதிபலிக்கிறது.
ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்தியாவின் வெற்றி மக்களை பெருமை அடைய செய்து இருக்கிறது.
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.
ஒரு காலத்தில் நக்சலைட்டுகள் பயங்கரவாதத்தின் இருள் நிலவிய பகுதிகளில் கூட தற்போது தீபங்கள் ஏற்றப்பட்டுள்ளது.
நக்சலைட்டுகள் அச்சுறுத்தல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அரசின் முயற்சிகள் வெளிச்சத்தையும், மகிழ்ச்சியையும் கொண்டு வந்துள்ளது.
ஒரு காலத்தில் பயத்தில் வாழ்ந்த மக்கள் தற்போது நக்சலைட்டுகள் செல்வாக்கை முற்றிலுமாக ஒழிக்க விரும்புகின்றனர்.
மக்கள் எங்கு வாழ்ந்தாலும் மரங்களை நட வேண்டும்.
அவை ஒவ்வொரு உயிரினங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுவோம் இயக்கத்தில் இணைந்து நாம் அனைவரும் மரங்கள் நட வேண்டும்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, வனத்துறையினர் ஆகமதாபாத் அருகே உள்ள தோலேராவில் சதுப்புநில மரங்களை நட தொடங்கினர்.
அங்குள்ள சுற்றுச்சூழல் அமைப்பில் டால்பின்கள், நண்டுகள் மற்றும் பிற நீர்வாழ் உயிரினங்களின் எண்ணிக்கை முன்பை விட அதிகரித்துள்ளது.
புலம்பெயர்ந்த பறவைகளும் தற்போது இங்கு அதிக எண்ணிக்கையில் வருகின்றன.
சுனாமி அல்லது சூறாவளி போன்ற பேரழிவுகள் ஏற்படும் போது இந்த சதுப்பு நிலங்கள் மிகவும் உதவியாக இருக்கும்.
ஜி எஸ் டி சீர்திருத்தம் மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த முறை பண்டிகைகளின் போது சந்தைகளில் சுதேசி பொருட்களின்
(உள்நாட்டு தயாரிப்பு) விற்பனை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
சமையல் எண்ணெய்ப் பயன்பாட்டில் 10% குறைத்துக் கொள்ளுங்கள் என்று நான் உங்கள் அனைவரிடமும் வேண்டுகோள் விடுத்திருந்தேன்.
இது தொடர்பாக உங்கள் செயல்பாடுகளை பார்க்க முடிந்தது.
அக் 31-ம் தேதி சர்தார் வல்லபாய் படேலின்
150-வது பிறந்த நாள் கொண்டாடப்பட இருக்கிறது.
அவர் தூய்மை மற்றும் நல்லாட்சிக்கு முன்னுரிமை அளித்தவர்.
இந்தியாவை ஒன்றிணைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு உள்ளார்.
அக் 31-ல் நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள மாரத்தான் போட்டியில் அனைவரும் பங்கேற்க வேண்டும்.
இந்தியாவின்
தேசியப்பாடலான
'வந்தே மாதரம்' இந்தியர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை உருவாக்குகிறது.
வந்தே மாதரம் என்ற கோஷம் 140 கோடி இந்தியர்களின் ஒற்றுமையை எடுத்துரைக்கிறது.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
Hindusthan Samachar / vidya.b