Enter your Email Address to subscribe to our newsletters



கோவை, 26 அக்டோபர் (ஹி.ச.)
தென் இந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவையில், ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளது.
இங்கு பல லட்சக் கணக்கான மக்கள் வெளியூரு, வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து குடும்பத்துடனும் தங்கி பணியாற்றி வருகின்றனர்.
இதில் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு செல்லும் தொழிலாளர்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருவது ரயில்களை தான். மேலும் நீண்ட தூரம் செல்லும் பயணிகளின் வசதிக்கு ஏற்ப உள்ளதால், அதிகளவில் ரயில்களை பயன்படுத்தி வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து கோவையில இருந்து நாள்தோறும் நூற்றுக் கணக்கான ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இதை அடுத்து கோவையில் இருந்து இருகூர் வழியாக சிங்காநல்லூர் செல்லும் ரயில் பாதையில் சூர்யா நகர் என்ற பகுதியில் கடந்த 22 ஆம் தேதி தண்டவாளத்தில் மரக்கட்டைகள் இருப்பதாக ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரியவந்தது.
தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரயில்வே காவல் துறையினர். அங்கு ரயில் தண்டவாளத்தில் வைக்கப்பட்டு இருந்த மரக்கட்டையை அகற்றி விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் அங்கு பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.
அதில் கோவை ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த தினேஷ், கோகுலகிருஷ்ணன், வினோத் என்ற சசிகுமார், கார்த்திக், புல்லுக்காட்டு பகுதியைச் சேர்ந்த நாகராஜ் மற்றும் சேலத்தைச் சேர்ந்த வேதவன் என்ற 6 பேர் என்பது தெரிய வந்தது.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் தண்டவாளத்தில் மரக்கட்டையை வைத்து ரயிலை சேதப்படுத்த முயன்றது தெரியவந்தது. பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஆகாஷ், தினேஷ், வேதவன் ஆகிய மூன்று பேர் ரயில் வண்டியை சேதப்படுத்தி பயணிகளின் உடைமைகளை திருடும் நோக்கத்துடன் கீழே கிடந்த மரக் கட்டைகளை எடுத்து ரயில் தண்டவாளத்தில் வைத்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் மூன்று பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கோவை மாநகர காவல் ஆணையர் நடவடிக்கை எடுத்தார்.
சிறையில் உள்ள அவர்களிடம் உத்தரவு நகல் வழங்கப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / V.srini Vasan