Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 26 அக்டோபர் (ஹி.ச)
பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றிப்பெற்றோருக்கு தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த் எக்ஸ் தளத்தில் பாராட்டி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் கபடி அணிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
குறிப்பாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த சென்னை, கண்ணகி நகரைச் சார்ந்த கார்த்திகா மற்றும் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அபினேஷ் மோகன்தாஸ் ஆகியோர் தங்கள் மிகச்சிறந்த ஆட்டத்திறன் மூலம் தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் புகழ் சேர்த்திருப்பது பாராட்டுக்குரியது.
சர்வதேச அளவில் தமிழகத்திற்கு மேன்மை தேடித் தந்த இந்த இளம் வீரர்களை, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ