நீர் நிலைகள், நீர் மேலாண்மை, பறவைகள் பற்றி ஆராய்ச்சி - பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு விவரித்து எடுத்துரைத்த ஆராய்ச்சியாளர்கள்
கோவை, 26 அக்டோபர் (ஹி.ச.) கோவை ஆனைகட்டி மலை பகுதியில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் சலீம் அலி பறவையியல் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி மையம் சார்பில் EIACP- Environment Information Awareness Capacity Building and Livelihood Programme செயல்பாட்டின் கீ
Researchers explained and discussed studies related to water bodies, water management, and birds with women and children — this awareness program was conducted at a pond in Coimbatore by the Salim Ali Centre for Ornithology and Natural History, an institute under the Central Government.


Researchers explained and discussed studies related to water bodies, water management, and birds with women and children — this awareness program was conducted at a pond in Coimbatore by the Salim Ali Centre for Ornithology and Natural History, an institute under the Central Government.


கோவை, 26 அக்டோபர் (ஹி.ச.)

கோவை ஆனைகட்டி மலை பகுதியில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் சலீம் அலி பறவையியல் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி மையம் சார்பில் EIACP- Environment Information Awareness Capacity Building and Livelihood Programme செயல்பாட்டின் கீழ் நீர் நிலைகள் குறித்தும் நீர்நிலைகளில் உள்ள பறவைகள் குறித்தும் நீர் நிலைகளை பாதுகாப்பது அதனை மேம்படுத்துவது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக இன்று கோவை சுண்டக்காமுத்தூர் பகுதியில் உள்ள செங்குளம் குளக்கரையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பெண்கள் குழந்தைகள் பலர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பறவைகள் மற்றும் நீர்நிலை ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்று நீர் நிலைகள் பற்றியும் அங்கு வசிக்கும் பறவைகள் அதன் குணங்கள் பற்றியும் நீர்நிலைகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் விவரித்தனர்.

குறிப்பாக நீர் நிலைகளை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் நீர் நிலைகளை மேம்படுத்த என்ன செய்ய வேண்டும் நீர்நிலைகள் பாதிக்காத வண்ணம் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய விஷயங்கள் எடுத்துரைக்கப்பட்டன.

இதில் கலந்துகொண்டவர்கள் பைனாக்குலர்கள் மூலம் நீர் நிலைகளில் உள்ள பல்வேறு பறவைகளை பார்த்து அவற்றின் குணங்கள் பற்றி கேட்டறிந்தனர்.

இது போன்ற நிகழ்வுகள் பெண்களுக்காக தொடர்ச்சியாக வரும் நாட்களில் மேற்கொள்ளப்படும் என்றும் இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் சலீம் அலி பறவையியல் மற்றும் வரலாற்று மையத்தை தொடர்பு கொள்ளலாம்.

Hindusthan Samachar / V.srini Vasan