திருச்செந்தூர் திருக்கோவில் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு தாம்பரம் - திருநெல்வேலி இடையே சிறப்பு ரெயில் இயக்கம்
சென்னை, 26 அக்டோபர் (ஹி.ச.) தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் நாளை (அக் 27) கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடைபெறவுள்ளது. நாளை மறுநாள் திருக்கல்யாண வைபவம் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து க
கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு தாம்பரம் - திருநெல்வேலி இடையே சிறப்பு ரெயில் இயக்கம்


சென்னை, 26 அக்டோபர் (ஹி.ச.)

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் நாளை (அக் 27) கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடைபெறவுள்ளது.

நாளை மறுநாள் திருக்கல்யாண வைபவம் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திருவிழாவின் போது பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்க சிறப்புரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

தாம்பரத்தில் இருந்து (வண்டி எண்: 06135) இன்று (26 அக்டோபர்) இரவு 10.35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில், மறுநாள் காலை 8 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

மறுமார்க்கத்தில் திருச்செந்தூரில் இருந்து (வண்டி எண்: 06136) நாளை (27 அக்டோபர்) இரவு 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில், அடுத்த நாள் காலை 8 மணிக்கு தாம்பரம் வந்து சேரும்.

ரெயில் அமைப்பு: 1 - ஏசி அமரும் வசதிகொண்ட பெட்டி, 11 - அமரும் வசதிகொண்ட பெட்டி, 4 - பொது வகுப்பு பெட்டி

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b