Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 26 அக்டோபர் (ஹி.ச.)
டெல்லி மற்றும் தலைநகர் பிராந்தியத்தில் தெரு நாய் தொல்லை குறித்த வழக்கை தானாக முன் வந்து விசாரித்து வரும் சுப்ரீம் கோர்ட்டு, பின்னர் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களையும் இந்த வழக்கின் தரப்பினராக எடுத்துக்கொண்டது.
தெரு நாய்களை பிடித்து கருத்தடை செய்து பிடித்த இடத்திலேயே விட வேண்டும் என கடந்த ஆகஸ்டு 22-ந்தேதி உத்தரவு ஒன்றை நீதிபதிகள் பிறப்பித்தனர்.
முன்னதாக டெல்லி மற்றும் தலைநகர் பிராந்தியத்தில் தெரு நாய்களை பிடித்து காப்பகங்களில் அடைக்குமாறு 2 நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவை 3 நீதிபதிகள் அமர்வு மாற்றியமைத்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, அஞ்சாரியா ஆகியோரை கொண்ட அமர்வு முன்பு நாளை (திங்கட்கிழமை) மீண்டும் விசாரிக்கப்படுகிறது.
இதில் சுப்ரீம் கோர்ட்டு தானாக பதிவு செய்த வழக்கு மற்றும் இந்த பிரச்சினை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட 4 தனித்தனி மனுக்களும் விசாரணைக்கு எடுக்கப்படுகின்றன.
Hindusthan Samachar / JANAKI RAM