Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 26 அக்டோபர் (ஹி.ச.)
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அள்ளியந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் லூகாஸ் 35, இவரது மனைவி செல்வி, லூகாஸ் குடிபோதைக்கு அடிமையானதால் கணவன் மனைவிக்குள் கடந்த இரண்டு ஆண்டுகளாக பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்துள்ளது.
தினந்தோறும் குடித்துவிட்டு மனநலம் பாதிக்கப்பட்டவர் லூகாஸ்.
இந்நிலையில் இன்று லூகாஸ் வீட்டில் தனியாக இருந்த போது தனக்குத்தானே கழுத்து அறுத்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்துள்ளார்.
உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவருக்கு கழுத்துப்பகுதியில் 15 தையல் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த லுகாஸ் மருத்துவமனையிலிருந்து மீண்டும் தற்கொலை செய்து கொள்வதற்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து வெளியே ஓடி உள்ளார்.
இதனைக் கண்ட அவரது மனைவியும் கணவன் லூகாஸ் பின்னாலே சென்றுள்ளார். திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியில் இருந்து வேலூர் புறவழிச்சாலை நோக்கி சென்ற லூகாஸ் முதலில் வந்த ஒரு பேருந்து முன்பு தற்கொலைக்காக பாய்ந்துள்ளார்.
பேருந்து ஓட்டுநர் சுதாரித்துக் கொண்டு பேருந்தை இடது புறமாக திருப்பி சென்று விடவே பின்னால் வந்த லாரி முன்பாக குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்தபோது லாரி ஓட்டுனர் திடீரென பிரேக் பிடித்துள்ளார்.
இதனால் கண்ணாடி ஏற்றிக்கொண்டு வந்த லாரியின் பின்பக்கம் வந்த மற்றொரு டைல்ஸ் ஏற்றி வந்த லாரி மோதியதில் முன்பக்கம் முழுவதும் சேதமடைந்த நிலையில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் நான்கு பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளனர்.
இந்நிலையில் தன் மீது வாகனங்கள் எதுவும் மோதாத நிலையில் அங்கிருந்து சிறிது தூரம் ஓடிய லூகாஸ் ரயில்வே மேம்பாலத்தின் மீது ஏறி குதித்து தற்கொலை செய்து கொண்டார். பின் தொடர்ந்து வந்த அவரது மனைவி செல்வி கூச்சலிடையே அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்படத்திற்கு வந்த தாலுகா போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் ரயில்வே மேம்பாலத்தின் மீது இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட லூகாசை அரை மணி நேரம் போராடி மீட்டு மேலே கொண்டு வந்தனர்.
அப்போது சிகிச்சைக்காக கொண்டு செல்ல காத்திருந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பரிசோதனை செய்த போது லூகாஸ் இறந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து லூக்காஸின் உடலை கைப்பற்றி திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தற்கொலை செய்து கொண்டு சிகிச்சைக்காக வந்த நபர் மீண்டும் தற்கொலை செய்ய பேருந்து மற்றும் லாரி மீது தற்கொலை செய்து கொள்ள பாய்ந்து தான் இறக்காததால் 30 அடி உயரம் கொண்ட ரயில்வே பிரிட்ஜில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN