Enter your Email Address to subscribe to our newsletters


மதுரை, 27 அக்டோபர் (ஹி.ச.)
மதுரை மாநகர் சிம்மக்கல் பகுதியை சேர்ந்த சிவ பக்தரான செல்வராணி.
இவர் தினசரி மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுவந்துள்ளார்.
இந்நிலையில் வழக்கம்போல இன்று காலை செல்வராணி கோவிலுக்கு செல்வதற்காக சென்றுள்ளார்.
அப்போது மதுரை வக்கில் புதுத்தெரு சந்திப்பு பகுதியில் சாலையின் நடுவே சாக்குமூட்டை ஒன்று கிடந்துள்ளது.
இதனை ஓரமாக தள்ளி விடுவதற்காக தனது காலால் எட்டி உதைத்த போது சாக்குமூட்டையில் 500 ரூபாய் பணக்கட்டு இருப்பது போல தெரிந்துள்ளது.
இதனை பார்த்து பதற்றமடைந்த செல்வராணி அருகில் உள்ள காவலரை அழைத்து கூறியுள்ளார்.
பின்னர் சாக்குமூட்டையை பிரித்துபார்த்தபோது 500 ரூபாய் பணம் கட்டுகட்டாக இருந்துள்ளது.
பின்னர் செல்வராணி அந்த சாக்கு மூட்டையை விளக்குத்தூண் காவல்நிலையத்திற்கு எடுத்துசென்று ஒப்படைத்துள்ளார்.
அப்போது செல்வராணியின் நேர்மையை பார்த்து காவல்துறையினர் அப்பெண்ணுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்
இதையடுத்து சாக்கு மூட்டையில் கிடந்த பணம் யாருடையது என்பது குறித்தான விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சாக்கு மூட்டையில் கிடந்த பணம் ஹாவாலா பணமா? வேறு யாரும் வியாபாரிகள் கொண்டுவந்த பணமா என விளக்குத்தூண் காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்திவருகின்றனர்.
Hindusthan Samachar / Durai.J