கடை உரிமையாளர் உட்பட இரண்டு பேர் குத்தி கொலை செய்யப்பட்ட வழக்கு - ஐந்து பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு
கோவை, 27 அக்டோபர் (ஹி.ச.) கோவையில் கடந்த 2015 ஆம் ஆண்டு என்.எச் சாலை அருகே உள்ள திருமால் வீதியைச் சேர்ந்தவர் முகமத் யூனுஸ் . இவர் மகன் மொய்தின் பாட்ஷா இவர் என்.எஸ் சாலையில் மாட்டிறைச்சி கடை நடத்தி வந்தார். மொய்தீன் பாஷா கடையில் இருந்து வீட்டிற்
A dispute over payment for beef in Coimbatore led to a fight, resulting in the stabbing and murder of the shop owner and another person. In this case, the court sentenced five accused to life imprisonment


A dispute over payment for beef in Coimbatore led to a fight, resulting in the stabbing and murder of the shop owner and another person. In this case, the court sentenced five accused to life imprisonment


A dispute over payment for beef in Coimbatore led to a fight, resulting in the stabbing and murder of the shop owner and another person. In this case, the court sentenced five accused to life imprisonment


கோவை, 27 அக்டோபர் (ஹி.ச.)

கோவையில் கடந்த 2015 ஆம் ஆண்டு என்.எச் சாலை அருகே உள்ள திருமால் வீதியைச் சேர்ந்தவர் முகமத் யூனுஸ் .

இவர் மகன் மொய்தின் பாட்ஷா இவர் என்.எஸ் சாலையில் மாட்டிறைச்சி கடை நடத்தி வந்தார். மொய்தீன் பாஷா கடையில் இருந்து வீட்டிற்கு செல்லும் பொழுது திருமால் வீதியைச் சேர்ந்த சாதிக் அலி என்பவர் 4 கிலோ மாட்டு இறைச்சி வாங்கி உள்ளார். கடையில் இருந்து ஊழியர்களிடம் மொய்தீன் பாட்ஷாவிடம் பணம் கொடுத்து விடுவதாக கூறி உள்ளார்.

ஆனால் கடை ஊழியர்கள் பணத்தை கொடுத்து விட்டு செல்லுங்கள் பணம் வாங்காவிட்டால் மொய்தீன் பாட்ஷா தங்களை திட்டுவார்கள் எனக் கூறி உள்ளனர். ஆனால் இதை கண்டுகொள்ளாமல் சாதிக் அலி சென்று விட்டார். இந்த தகவல் கடையில் இருந்த ஊழியர்கள் மொய்தீன் பாட்ஷா - விற்கு செல்போனில் தெரிவித்தனர்.

சாதிக் அலி, மொய்தின் பாஷாவிற்கு ஏற்கனவே அறிமுகமானவர். இந்நிலையில் மொய்தின் பாஷா, சாதிக் அலியை செல்போனை தொடர்பு கொண்டு இறைச்சி வாங்கி விட்டு பணம் தராமல் சென்றது தொடர்பாக பேசி வாக்குவாதம் செய்து உள்ளார்.

அப்பொழுது சாதிக் அலி ஒப்படைக்கார வீதி, இடையார் வீதி சந்திப்பில் இரவு வந்து பணம் தருவதாக கூறி செல்போனில் இணைப்பை துண்டித்து உள்ளார்.

இந்நிலையில் மொய்தின் பாட்ஷா, தனது நண்பரான என்.எச் சாலை அருகே உள்ள சந்திரன் லே-அவுட் சேர்ந்த மருந்து விற்பனை பிரதிநிதி அபி முகமத் என்பவர் இடையார் வீதி சந்திப்பதற்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். அங்கே வந்த சாதிக் அலி, மொய்தின் பாஷாவுடன் வாக்குவாதம் செய்து சரமாரியாக தாக்கி உள்ளார். அவருடன் இருந்த அபீ முகத்தையும் தாக்கி உள்ளார்.

சாதிக் அலியுடன் திருமால் வீதியைச் சேர்ந்த மன்சூர் அலி, அஷ்ரப், உக்கடம் லாரிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த உறவினர் ஷேக் அலி, ஜாகீர், அஸ்கர் அலி ஆகியோர் இருந்தனர்.

இவர்கள் அனைவரும் சேர்ந்து மொய்தீன் பாஷா, அபி முகமத் ஆகியோரை கத்தியால் சரமாரியாக குத்தியதாக தெரிகிறது. இதில் மொய்தின் பாஷா பலத்த காயம் அடைந்து கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அபி முஹம்மத் அவரும் இறந்து விட்டார்.

இந்நிலையில் இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆறு பேரில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஷேக் அலி உயிரிழந்தார். இந்த வழக்கை கோவை ஐந்தாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில் கொலையாளிகள் சாதிக் அலி, அஸ்கர் அலி, மன்சூர் அலி, ஜாகிர் உசேன், அசாருதீன் ஆகிய ஐந்து பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் தலா நான்கு ரட்ச ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்து உத்தரவிட்டார்.

Hindusthan Samachar / V.srini Vasan