Enter your Email Address to subscribe to our newsletters

மயிலாடுதுறை, 27 அக்டோபர் (ஹி.ச.)
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை வட்டம் கிழாய் கிராமத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் ஈரப்பதம் குறித்து இந்திய தானிய சேமிப்பு மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணை இயக்குநர் பி.கே.சிங்க் தலைமையிலான மத்திய குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உடன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாண்மை இயக்குநர் முனைவர் ஆ.அண்ணாதுரை,
மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்,மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சுதா மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார்,தொழில்நுட்ப அலுவலர்கள் ஷோபிட் ஷிவாஜ்,ராகேஷ் பராலா,தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் நலினா,தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மேலாளர் செந்தில்,இந்திய உணவுக் கழகம் மேலாளர் மோகன் உள்ளிட்டோர் இந்த ஆய்வின் போது உடன் இருந்தனர்.
Hindusthan Samachar / Durai.J