சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதை எதிர்த்து உழைப்போர் உரிமை இயக்கம் தொடர் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது - காவல்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல்
சென்னை, 27 அக்டோபர் (ஹி.ச.) சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதை எதிர்த்து உழைப்போர் உரிமை இயக்கம் தொடர் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என காவல்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியின்
High


சென்னை, 27 அக்டோபர் (ஹி.ச.)

சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதை எதிர்த்து உழைப்போர் உரிமை இயக்கம் தொடர் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என காவல்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கியதை எதிர்த்து தொடர் போராட்டம் நடத்த அனுமதிகோரி உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் பொருளாளர் மோகன் வழக்கு தொடர்ந்திருந்தார்

உழைப்போர் உரிமை இயக்கத்தின் யூனியன் அலுவலகத்தில் தொடர் போராட்டம் நடத்த அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுதாரர் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

யூனியன் அலுவலகம் இருக்கும் இடம் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் இடமா?இல்லையா என்பது குறித்து ஆய்வு செய்து தெரிவிக்க காவல்துறைக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா உத்தரவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ