Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 அக்டோபர் (ஹி.ச.)
கரூர் சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், விசாரணை தொடர்பாக தவெக தரப்பு வழக்கறிஞர் அறிவழகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது,
இந்த வழக்கை பொதுநல வழக்காக விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்த விசாரணையில், அரசியல் கட்சிகள் கூட்டம் நடத்துவது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை.
ஓஎஸ்பி எனும் வழிகாட்டு நெறிமுறைகளை அரசு உருவாக்காமல் இருப்பது தவறு. வழிகாட்டு நெறிமுறை அடிப்படையில் அரசியல்
கட்சிகளுக்கு அனுமதி மறுக்க கூடாது
என்றும், அரசியல் கட்சி சார்பில் கொடுக்கப்படும் மனுக்களையும் உடனடியாக பரிசளிக்க வேண்டும். அதற்காக தான் இந்த வழக்கு விசாரணை. இதை தான் நீதிபதி தெரிவித்ததாக கூறினார்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் ஜி.எஸ் மணி பேசுகையில்,
கரூர் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நடந்தது. நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு முக்கிய காரணம், மாவட்ட காவல்துறையும், ஒழுங்காக நடவடிக்கை எடுக்கவில்லை என்று மனு தாக்கல் செய்திருந்தோம். அந்த வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மாநில நெடுஞ்சாலைகளில், அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு வழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், 10 நாட்கள் கால அவகாசம் கொடுத்ததாகவும், தமிழக அரசு எஸ்ஓபி எனும் வழிகாட்டு நெறிமுறைகளை கொண்டு வர வேண்டும். அத்துடன் அரசுக்கு நீதிமன்றம் கண்டனத்தை தெரிவித்ததாகவும், தமிழக அரசிடம் மனுக்கள் வந்தால் அதன் மீது பரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறினார்.
மனுதாரர் ராஜன் பேசுகையில்,
இந்த விவகாரம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறேன். விசாரணை தொடர்பாக கடந்த 13 ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்திருந்தது என்றும், என்னுடைய மனுவை உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்று மனு தாக்கல் செய்வதாகவும் கூறினார்.
Hindusthan Samachar / P YUVARAJ