Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 அக்டோபர் (ஹி.ச)
பட்டம் என்பது வெறும் காகிதமல்ல; மாணவர்களின் உழைப்புக்குக் கிடைக்கும் அங்கீகாரம் என குறிப்பிட்டு முதலமைச்சர் முக.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
புதிய வாய்ப்புகளை உருவாக்கிடும் தொழில்முனைவோர்களாக உயர்ந்தும், பல்வேறு இந்திய நிறுவனங்களிலும் - பன்னாட்டு நிறுவனங்களிலும் CEO உள்ளிட்ட உயர் பொறுப்புகளில் அமர்ந்தும், நமக்குப் பெருமை தேடித்தரவுள்ள பாரதிதாசன் மேலாண்மை நிறுவனத்தின் மாணவர்களை வாழ்த்திப் பட்டங்களை வழங்கினேன்.
கல்வியால் தலைசிறந்த தமிழ்நாட்டின் மாணவர்கள் உலகளவில் உயர் பொறுப்புகளில் நிறைந்திட வேண்டும்.
இன்னும் பல சாதனையாளர்கள் நம் மண்ணில் உருவாகிட எடுத்துக்காட்டாகத் திகழ்ந்திட வேண்டும் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ