Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 27 அக்டோபர் (ஹி.ச.)
குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் 28 ஆம் தேதி கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
குடியரசு துணைத் தலைவராக பதவியேற்ற பின்பு முதல் முறையாக கோயம்புத்தூர் வரும் சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க வினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
அதனைத் தொடர்ந்து, Coimbatore citizen forum அமைப்பின் சார்பில் கொடிசியா வளாகத்தில் நடைபெறும் பாராட்டு நிகழ்வில் பங்கேற்கிறார்.
பின்னர், டவுன் ஹால் பகுதியில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் அமைந்து உள்ள மகாத்மா காந்தி திருவுருவச் சிலைக்கு குடியரசுத் துணைத் தலைவர் மரியாதை செலுத்துகிறார். இதனை அடுத்து பேரூர் ஆதீன மட வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
குடியரசு துணைத் தலைவரின் வருகையையொட்டி கோயம்புத்தூர் மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக 27 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை, கொடிசியா, ரெட் பீல்ட்ஸ், டவுன்ஹால், பேரூர் மற்றும் மருதமலை ஆகிய பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, ட்ரோன்கள் இயக்க தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பவன்குமார் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அறிவிப்பை மீறி ட்ரோன் பறக்க விடுவோர் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கூறப்பட்டு உள்ளது.
கோயம்புத்தூர் நிகழ்வுகளை தொடர்ந்து குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் திருப்பூர் செல்கிறார்.
Hindusthan Samachar / V.srini Vasan