துணை ஜனாதிபதி வருகையையொட்டி 2 -நாட்கள் திருப்பூரில் டிரோன்கள் பறக்க தடை
திருப்பூர், 27 அக்டோபர் (ஹி.ச.) இந்திய துணை ஜனாதிபதியாக அண்மையில் பதவி ஏற்றுக்கொண்ட சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் பிறந்தவர் ஆவார். இதனிடையே 2 நாட்கள் பயணமாக சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை (அக் 28) தமிழகம் வர உள்ளார். சி.ப
துணை ஜனாதிபதி வருகையை முன்னிட்டு  2 நாட்கள் திருப்பூரில் டிரோன்கள் பறக்க தடை


திருப்பூர், 27 அக்டோபர் (ஹி.ச.)

இந்திய துணை ஜனாதிபதியாக அண்மையில் பதவி ஏற்றுக்கொண்ட சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் பிறந்தவர் ஆவார். இதனிடையே 2 நாட்கள் பயணமாக சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை (அக் 28) தமிழகம் வர உள்ளார்.

சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை கோவையில் பாஜக சார்பில் நடைபெறும் பாராட்டு விழாவில் கலந்துகொள்கிறார்.

நாளை மறுநாள் சொந்த ஊரான திருப்பூரில் தனது தாயாரை சந்தித்து ஆசி பெறுகிறார்.

பின்னர் திருப்பூர் ரெயில் நிலையம் முன் உள்ள குமரன் சிலை, மாநகராட்சி அலுவலகம் முன் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

பின்னர் ஷெரீப் காலனியில் உள்ள தனது வீட்டுக்கு சென்று தாயாரிடம் ஆசி பெறுகிறார்.

துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனின் திருப்பூர் வருகையை முன்னிட்டு நாளை (அக் 28), மற்றும் நாளை மறுநாள் (அக் 29) ஆகிய 2 நாட்கள் திருப்பூர், காங்கயம் பகுதியில் டிரோன்கள் பறக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b