Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 27 அக்டோபர் (ஹி.ச.)
முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணியசாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இக்கோவில் இந்தாண்டு கந்தசஷ்டி விழா கடந்த 22 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. நாள்தோறும் யாகசாலை பூஜை, அபிஷேக பூஜைகள், திருவீதி உலா நடந்து வருகிறது. கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டு உள்ளது.
சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை தொடர்ந்து பாதுகாப்பு பணிக்காக 200க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பணியில் ஈடுபட்டு உள்ளனர். அவர்களுக்கு இந்து சமய அறநிலைத் துறை சார்பில் கோவில் நிர்வாகத்தினர் காலை சிற்றுண்டி உணவு வழங்கினர். அப்பொழுது அவர்களுக்கு குடிநீர் கேன்கள் வழங்கப்பட்டது . அதில் கடந்த மாதம் 24 ஆம் தேதியுடன் காலாவதியானதாக இருந்ததை கண்டு சில காவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் பாதுகாப்புக்கு வந்த தங்களின் உயிருக்கு பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாக புலம்பியது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / V.srini Vasan