Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 27 அக்டோபர் (ஹி.ச.)
நாடு முழுவதும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தலைமை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ள பீஹாரில் அண்மையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற்று முடிந்தது.
தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்னும் ஒரு வாரத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கும் என்று தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்து இருந்தது.
இத்தகைய சூழலில், தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று (அக் 27) செய்தியாளர்களை சந்திக்கிறார்கள். டெல்லியில் இன்று மாலை 4.15 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெறுகிறது.
இந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணி தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் கட்டமாக, மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாடு உட்பட சுமார் 10 மாநிலங்களில் வாக்காளர் திருத்த பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.அஸ்ஸாம், கேரளா மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகியவையும் இந்தப் பட்டியலில் அடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பணிகளின் மூலம் வாக்காளர் பட்டியலில் உள்ள பிழைகள் திருத்தப்பட்டு, புதிய வாக்காளர்கள் சேர்க்கப்படுவர்.
Hindusthan Samachar / vidya.b