Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 அக்டோபர் (ஹி.ச.)
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள், வடகிழக்கு பருவமழை காலத்தில் அதிகம் பாதிக்கப்படுகின்றன.
இம்மாவட்டங்களில் உள்ள நீர்வழித்தடங்களில், வடகிழக்கு பருவமழை துவங்கும்முன், வெள்ளத் தடுப்பு பணிகளை மேற்கொள்ள, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
வடகிழக்கு பருவ மழை எதிரொலியாக 16 தண்ணீர் தேங்கும் இடங்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் சென்னையில் 900 வீரர்கள் உள்ள நிலையில் தயார் நிலையில் உள்ளனர்.
தேசிய பேரிடர் மீட்பு படையினர் சென்னை புறநகர் பகுதிகளில் தயார் நிலையில் உள்ளனர். தீயணைப்பு துறையிலும், பிற மாவட்டங்களில் இருந்து 120 தீயணைப்பு வீரர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர்.
தாம்பரம் முடிச்சூர், வேளாச்சேரி, சேலையூர், ஊரப்பாக்கம் உள்ளிட்ட தண்ணீர் தேங்கும் பகுதி என கண்டறியப்பட்ட 16 இடங்களில் தீயணைப்பு வீரர்கள் முகாமிட்டு உள்ளனர். வெளிமாவட்டங்களில் இருந்து 17 ரப்பர் படகுகளும் சென்னை கொண்டு வரப்பட்டு உள்ளன.
இதுதவிர மீட்பு பணிகளுக்கு தேவைப்படும் ரப்பர் மிதவைகள், கயிறு, மரம் வெட்டும் எந்திரங்கள் ஆகியவைகளும் தயாராக வைத்து உள்ளனர்.
இதுதவிர நீச்சல் தெரிந்த வீரர்களும் தீயணைப்பு துறையில் தயார் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b