Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 அக்டோபர் (ஹி.ச.)
இன்று பலர் வெளியிடங்களுக்கு செல்ல ஓலா, ஊபர் போன்ற செயலி அடிப்படையிலான டேக்சி சேவைகளை நம்பி இருக்கிறார்கள்.
இந்த தனியார் டாக்ஸி சேவைகளின் அதிகரித்து வரும் தன்னிச்சையான தன்மை மற்றும் விலை நிர்ணயத்தால் சிரமப்படுபவர்களுக்கு ஒரு பெரிய நிவாரணம் கிடைத்துள்ளது.
தனியார் துறை டேக்சி சேவைகளின் இந்த அடாவடித்தனத்தை எதிர்த்துப் போராட, மத்திய அரசு அரசாங்கத்தால் நடத்தப்படும் நாட்டின் முதல் அரசு டாக்ஸி சேவையான பாரத் டாக்ஸியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் அதிகாரப்பூர்வ செயலி கூகிள் பிளே ஸ்டோர் (Google Play Store) மற்றும் ஆப்பிள் ஆப் (Apple App Store) ஸ்டோரில் கிடைக்கிறது.
இந்த செயலி தற்போது சோதனை முயற்சியில் உள்ளது. இது நவம்பர் மாதம் தலைநகர் டெல்லியில் தொடங்கும் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ஆரம்பத்தில், 600 ஓட்டுநர்கள் இணைவார்கள் என்றும், டிசம்பர் மாதத்திற்குள், நாடு தழுவிய அளவில் 5,000 ஓட்டுநர்களாக இதை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Bharat Taxi App
- பாரத் டாக்ஸி செயலியைப் பயன்படுத்த, பயனர்கள் முதலில் செயலியைப் பதிவிறக்கம் செய்து ஒரு கணக்கை உருவாக்க வேண்டும்.
- பயனர்கள் ப்ளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோரிலிருந்து பாரத் டாக்ஸி செயலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
- முகப்புப் பக்கத்தில் Sign up என்பதை டேப் செய்து, உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் மற்றும் கடவுச்சொல் உள்ளிட்ட தேவையான விவரங்களை உள்ளிடவும்.
- உங்கள் எண்ணுக்கு ஒரு OTP அனுப்பப்படும், இது உள்ளிட்டவுடன் உங்கள் கணக்கு உருவாகும்.
- உங்கள் தொலைபேசி எண் மற்றும் நீங்கள் அமைத்த கடவுச்சொல்லைப் பயன்படுத்தி செயலியில் லாக் இன் செய்யவும்.
Bharat Taxi App: டாக்ஸி முன்பதிவு செய்வதற்கான முழுமையான செயல்முறை
செயலியில் லாக் இன் செய்த பிறகு, நீங்கள் டாக்ஸி முன்பதிவு செய்யத் தொடங்கலாம். தற்போது சேவைகள் குறைவாக இருந்தாலும், முன்பதிவு செய்வது எளிது.
1. முகப்புப் பக்கத்தில், மூன்று விருப்பங்கள் காணப்படும். Rentals ஆப்ஷன் 8 மணிநேரம் வரை ஒரு காரை வாடகைக்கு எடுக்க உங்களை அனுமதிக்கிறது. Outstation ஆப்ஷன் நகரத்திற்கு வெளியே பயணிக்க உங்களை அனுமதிக்கிறது.
2. அருகில் உள்ள இடங்களுக்கு பயணிக்க, Local Transfer டேபை கிளிக் செய்யவும். இது தற்போது விமான நிலைய பிக்அப் அல்லது விமான நிலைய டிராப்-ஆஃப் ஆகியவற்றை வழங்குகிறது. Local Transfer டேபில், உங்கள் பிக்அப் மற்றும் டிராப்-ஆஃப் இடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
3. செல்ல வேண்டிய இடத்தைத் தேர்ந்தெடுத்த பிறகு, சர்ச் என்பதைத் டேப் செய்யவும். கிடைக்கக்கூடிய வாகனங்களின் பட்டியல் தோன்றும்போது, உங்களுக்கு விருப்பமான வாகனத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
4. பின்னர், Confirm Booking என்பதை டேப் செய்யவும். கட்டணத் தகவலை மதிப்பாய்வு செய்த பிறகு, Next என்பதைத் டே செய்து, பின்னர் Book Now என்பதை டேப் செய்து முன்பதிவை உறுதிபடுத்தவும்.
ஏதோ ஒரு காரணத்திற்காக ஒரு ரைடை ரத்து செய்ய வேண்டுமானால், செயல்பாட்டின் கீழே உள்ள My Rides -ஐ டேப் செய்யவும். இங்கே, உங்கள் முன்பதிவுக்கு அடுத்துள்ள Pending ஆப்ஷனை டேப் செய்யவும். அங்கு Cancel Ride ஆப்ஷன் இருக்கும். ரத்து செய்வதற்கான காரணத்தை உள்ளிட்டு, பயணத்தை ரத்து செய்ய Ok என்பதை டேப் செய்யவும்.
இந்த செயலி தற்போது வரையறுக்கப்பட்ட சேவைகளை வழங்குவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மேலும் முன்பதிவு செய்த பிறகு ஒரு ஓட்டுநரைத் தொடர்புகொள்வது கடினமாக இருக்கலாம். செயலி அவ்வப்போது செயலிழக்கும் பிரச்சனைகளும் இப்போது இருக்கின்றன.
டெல்லியில் பைலட் திட்டம் தொடங்கும் நேரத்தில் இந்த தொழில்நுட்பக் குறைபாடுகள் சரிசெய்யப்படும் என்று நம்பப்படுகிறது. மேலும் இந்த செயலி ஓலா மற்றும் ஊபருக்கு வலுவான போட்டியை வழங்கும்.
Hindusthan Samachar / JANAKI RAM