Enter your Email Address to subscribe to our newsletters

கிருஷ்ணகிரி, 27 அக்டோபர் (ஹி.ச.)
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், சம்பா சிறப்பு பருவ நெல் பயிருக்கு வரும் 31 ஆம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்ய அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மைத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், சம்பா சிறப்பு பருவ நெல் பயிருக்கு காப்பீடு செய்ய வரும், 31ம் தேதி கடைசி நாளாகும். ஒரு ஏக்கருக்கான பயிர் காப்பீட்டு தொகை, 38,300 ரூபாய். அதற்கு விவசாயிகள் ஏக்கருக்கு, 574.50 ரூபாயை காப்பீட்டு கட்டணமாக செலுத்த வேண்டும்.
இத்திட்டத்தில் விவசாயிகள் பதிவு செய்யும் போது, முன்மொழிவு விண்ணப்பம், பதிவு விண்ணப்பம், வி.ஏ.ஓ., வழங்கும் நடப்பு பசலிக்கான அடங்கல், வங்கி கணக்கு புத்தக முதல் பக்க ஜெராக்ஸ், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து, கட்டண தொகையை செலுத்தி, அதற்கான ரசீதை பொது சேவை மையங்களில் பெற்று கொள்ளலாம்.
மேலும் விபரங்களுக்கு, தங்களது வட்டாரத்தில் உள்ள வேளாண்மை உதவி இயக்குனர்களை தொடர்பு கொள்ளலாம். அல்லது 14447 என்ற கட்டணமில்லா எண்ணிலும் தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்டு தெளிவு பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b