ஆடு மாடுகள் திருடிய வழக்கில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த இருவர் கைது
கள்ளக்குறிச்சி, 27 அக்டோபர் (ஹி.ச.) கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள அரசம்பட்டு கிராமத்தைச் சார்ந்தவர் நடேசன் மகன் மணி, இவருக்கு அரசம்பட்டு காட்டு கொட்டாய் பகுதியில் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் 10-க்கும் மேற்பட்ட ஆடுகள் வைத்து
Prison


கள்ளக்குறிச்சி, 27 அக்டோபர் (ஹி.ச.)

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள அரசம்பட்டு கிராமத்தைச் சார்ந்தவர் நடேசன் மகன் மணி, இவருக்கு அரசம்பட்டு காட்டு கொட்டாய் பகுதியில் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் 10-க்கும் மேற்பட்ட ஆடுகள் வைத்து வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வழக்கம்போல் ஆடுகளை தனது விவசாய நிலத்தில் உள்ள ஆட்டுப்பட்டியில் கட்டிவிட்டு வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. திடீரென காலையில் வந்து ஆடுகளை எண்ணி பார்த்தபோது 2 ஆடுகள் குறைவாக இருந்தது தெரிய வந்தது.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மணி அருகிலுள்ள சங்கராபுரம் காவல் நிலையத்தில் தனக்கு சொந்தமான ஆடுகளை காணவில்லை என புகார் அளித்தார், புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீசார் ஆட்டை திருடிய நபர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

திடீரென அந்தப் பகுதியில் சங்கராபுரம் போலீசார் வாகன தனிக்கையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது சந்தேகத்துக்கு இடமாக இரண்டு நபர்கள் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது அவர்களை நிறுத்தி விசாரணை செய்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததில் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கேரள மாநிலம் மூணார் பகுதியைச் சேர்ந்த அஜய்குமார் மற்றும் ஆண்டனி என தெரிய வந்தது.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் ஆடு மாடுகள் திருடில் ஈடுபட்டுள்ளதாகவும் மணி என்பவரின் ஆட்டையும் திருடியவர்கள் இவர்கள் தான் என உறுதி செய்யப்பட்டதன் அடிப்படையில் இருவரையும் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN