கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியருக்கு நாம் தமிழர் கட்சியினர் எச்சரிக்கை
கன்னியாகுமரி, 27 அக்டோபர் (ஹி.ச.) கன்னியாகுமரி மாவட்டம் இரணியலில் வழிபாட்டு தளம், அரசு பள்ளி கூடம் அருகில் இயங்கும் டாஸ்மார்க் கடையை மாற்ற மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டும் மாவட்ட நிர்வாகம் இதுவரை மாற்ற முன் வரவில்லை இது தொடர்பாக நாகர்கோவிலில் ஆ
NTK kumari


கன்னியாகுமரி, 27 அக்டோபர் (ஹி.ச.)

கன்னியாகுமரி மாவட்டம் இரணியலில் வழிபாட்டு தளம், அரசு பள்ளி கூடம் அருகில் இயங்கும் டாஸ்மார்க் கடையை மாற்ற மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டும் மாவட்ட நிர்வாகம் இதுவரை மாற்ற முன் வரவில்லை இது தொடர்பாக நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியினர் புகார் மனு அளித்துள்ளனர்.

டாஸ்மார்க் கடையை எந்த இடத்தில் வைக்க வேண்டும் என ஆய்வு செய்து அனுமதி வழங்கும் உரிமை மாவட்ட ஆட்சியருக்கு உண்டு.

அப்படி இருக்கையில் வழிபாட்டு தளம், பள்ளி கூடம் அருகே டாஸ்மார்க் கடை அமைக்க ஆட்சியர் எப்படி அனுமதித்தார்? பணம் வாங்கி அல்லது அரசியல் வாதிக்காகவா ஆட்சியர் அனுமதி வழங்கினார் என கேள்வி எழுப்பி உள்ளனர்.

48 மணி நேரத்தில் கடையை அடைக்க உத்தரவிட்டு, அக்டோபர் 16 ஆம் தேதி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

இவ்வுளவு நாள் ஆகியும் நீதிமன்ற தீர்ப்பை ஏன் ஆட்சியர் மதிக்கவில்லை? மேலும் நடவடிக்கை இல்லை என்றால் நாங்களே கட்சி சார்பில் கடையை மூடுவோம் என நாம் தமிழர் கட்சியினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN