Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 அக்டோபர் (ஹி.ச.)
மக்கள் முதல்வரின் மனிதநேய விழா 2025-ஐ முன்னிட்டு, சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபுவின் ஏற்பாட்டில், ‘’அன்னம் தரும் அமுதக் கரங்கள்’’ நிகழ்ச்சியின் 250வது நாள் விழா இன்று (அக் 27) கொளத்தூர் ஜி.கே.எம்.காலனி 36வது கட் சாலை,கொளத்தூர் மெயின் ரோடு டீச்சர்ஸ் கில்டு சாலை ஆகிய இடங்களில் நடைபெற்றன.
இதில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு அறுசுவை காலை சிற்றுண்டி வழங்கினார். பின்னர் 250வது நாள் வெற்றி விழா கேக் வெட்டி கொண்டாடப் பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மேயர் பிரியா, கலாநிதி வீராசாமி எம்பி, எம்எல்ஏக்கள் தாயகம் கவி, ஜோசப் சாமுவேல், வெற்றியழகன், மண்டலக் குழு தலைவர் சரிதா, பகுதி செயலாளர்கள் ஐ.சிஎப். முரளி,நாகராசன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சந்துரு, மகேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / vidya.b