Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 அக்டோபர் (ஹி.ச.)
கடந்த மாதம் 27 ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
தவெக பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், கரூர் மாநகர பொறுப்பாளர் பவுன்ராஜ் உள்ளிட்டோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவை உயர்நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்திருந்தது. மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இதையடுத்து முன் ஜாமீன் மனுவை திரும்ப பெற விரும்புவதாகக் கூறி உயர் நீதிமன்றத்தில் புஸ்ஸி ஆனந்த் மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில், புஸ்ஸி ஆனந்த் முன்ஜாமின் மனு இன்று (அக் 27) சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீதான வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்ட நிலையில், முன்ஜாமீன் மனுவை திரும்ப பெறுவதாக அவர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி அமர்வு இதற்கு அனுமதி அளித்து, அவருடைய முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b