Enter your Email Address to subscribe to our newsletters

உசிலம்பட்டி, 27 அக்டோபர் (ஹி.ச.)
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் உள்ள வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன் உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் ஆய்வு செய்து நகர் மன்ற உறுப்பினர்களிடம் மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
தொடர்ந்து புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை ஆய்வு செய்த நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது தமிழ்நாடு முதல்வர் உத்தரவின்படி உசிலம்பட்டி, சோழவந்தான், போடி தொகுதிகளில் சிறப்பு கவணம் செலுத்தி மக்களுக்கு தேவையான பிரச்சனைகளை சரி செய்ய ஆய்வு செய்தேன்.
உசிலம்பட்டி நகர் பகுதியில் உப்பு தண்ணீர் வழங்கப்படவில்லை என கோரிக்கை வைத்தனர், அதை விரைவில் வழங்க நடவடிக்கைகள் எடுக்க உள்ளோம், கண்மாய் பகுதியில் நடைபாதை அமைக்க 11 கோடி நிதி கேட்டுள்ளோம் தயாராகிவிடும்.
உசிலம்பட்டி பேருந்து நிலைய விரிவாக்கத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது விரைவில் முடிவடையும், மற்ற தொகுதிகளை விட உசிலம்பட்டி நகராட்சிக்கு அதிக நிதியை தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளது.
பேருந்து நிலைய பணிகள் 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஆமை வேகத்தில் நடைபெறும் சூழலில் இன்னும் 15 நாட்களில் விரிவாக்கத்திற்கான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி கூடிய விரைவில் நடைமுறைக்கு கொண்டு வரப்படும்.
உசிலம்பட்டி 58 கால்வாய்க்கு தண்ணீர் திறக்க பரிந்துரை கடிதம் மதுரை மாவட்ட ஆட்சியர் அனுப்பியுள்ளார், மண்டல பொறுப்பாளரான அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் நீர்வளத்துறை அமைச்சரிடமும் பேசியுள்ளோம் நிச்சயமாக கூடிய விரைவில் 58 கால்வாய்க்கு வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும் என பேட்டியளித்தார்.
Hindusthan Samachar / Durai.J