Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 27 அக்டோபர் (ஹி.ச.)
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெறுகிறது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
முருகனின் ஏழாம் படை வீடாக, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இக்கோவில் இந்தாண்டு கந்த சஷ்டி விழா கடந்த 22 ஆம் தேதி காப்பு கட்டுகளுடன் துவங்கியது. நாள்தோறும் யாக சாலை பூஜை, அபிஷேக பூஜை, திருவீதி உலா நடந்தது. கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். இதனால் அங்கு ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இன்றும், நாளையும் அடிவாரத்தில் இருந்து மலை மேல் செல்ல இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு அனுமதி இல்லை எனக் கோவில் நிர்வாகித்தனர் தெரிவித்து உள்ளனர்.
வாகனங்கள் நிறுத்துவதற்காக சட்டக் கல்லூரி அருகே அமைக்கப்பட்டு உள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில் பக்தர்கள் தங்களின் இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி சென்றனர். கோவில் பேருந்து வாயிலாகவும், படிக்கட்டு பாதை வாயிலாகவும் மலை மேல் உள்ள கோவிலுக்கு செல்ல சென்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் பாதுகாப்புக்காக 200 - க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
பக்தர்களுக்கு தேவையான குடிநீர், பார்க்கிங், பேருந்து, மருத்துவ வசதிகள் கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்டம் நிர்வாகம் இணைந்து செய்து உள்ளனர்.
Hindusthan Samachar / V.srini Vasan