Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 27 அக்டோபர் (ஹி.ச.)
கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் தரணியெங்கும் தமிழ்நாட்டு பொருட்கள் குறித்தும் உலகத் தமிழர்களின் வர்த்தக பெருவிழா,உலகளவில் சிறுதானிய உணவு விழிப்புணர்வு குறித்து மற்றும் சர்வதேச தமிழர்கள் வர்த்தக மாநாடு குறித்து கோவை மாவட்ட சிறுதானிய உற்பத்தியாளர்கள் அமைப்பினர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,
உலகின் முதல் முறையாக தமிழ்நாட்டின் தொழில்முனைவோர்களுக்கும், தமிழ்நாட்டின் பாரம்பரிய பிரத்யேக தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கும் உலகளாவிய சந்தைகள் உருவாகும் நோக்கத்துடன் சர்வதேசத் தமிழர்கள் வர்த்தக மாநாடு மலேசியாவில் டிசம்பர் 22-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு மலேசியாவில் உள்ள விந்தாம் கார்டன் ஐ-சிட்டி மிட்லேண்ட்ஸ் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற உள்ளது.
23-ம் தேதி மலேசியாவில் உள்ள தமிழக வர்த்தக சங்கம் 4-வது ஆண்டு விழாவும் நடைபெறுகிறது.இந்த விழாவில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலேசியா வர்த்தகர்கள்,பொதுமக்கள் பங்கேற்க உள்ளனர்.அதேபோல மாநாட்டில் கலந்து கொள்ளும் பொது மக்களுக்கு நான்கு நாட்களுக்கு சிறுதானிய உணவுகள் மட்டுமே வழங்கப்படும் என தெரிவித்தனர்.
இந்த மாநாட்டில் சோளம்,கம்பு, எண்ணெய் வித்துக்கள்,சிறு தானியங்கள்,மலைவாழ் மக்கள் தயாரிப்புகள்,பனைப் பொருட்கள், தென்னை விவசாயம் பாரம்பரிய மூலிகை பொருள் தயாரிப்பாளர்கள், உழவர் உற்பத்தியாளர் குழுக்கள், வேளாண் பொருட்கள் மதிப்பு கூட்டு பொருட்கள் என 55 தொழில் முனைவர்கள் தேர்வு செய்து மலேசியாவிற்கு அளித்து செல்ல உள்ளனர்.
இவ்வாறு பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளனர்
Hindusthan Samachar / V.srini Vasan