மறைந்த மரியம் அபு தக்காவுக்கு 2025-ஆம் ஆண்டுக்கான “பத்திரிகை ஹீரோஸ்” விருது அறிவிப்பு!
புதுடெல்லி, 27 அக்டோபர் (ஹி.ச.) பாலஸ்தீனத்தில் மோசமான, யுத்த கள நிகழ்வுகளில் செய்தி சேகரிப்பதில் துணிச்சலையும், அர்ப்பணிப்பையும் அங்கீகரிக்கும் விதமாக, பாலஸ்தீன பத்திரிகையாளர் தியாகி மரியம் அபு தக்காவுக்கு 2025 ஆம் ஆண்டுக்கான “பத்திரிகை ஹீரோஸ்” வி
மரியம்மரியம்


புதுடெல்லி, 27 அக்டோபர் (ஹி.ச.)

பாலஸ்தீனத்தில் மோசமான, யுத்த கள நிகழ்வுகளில் செய்தி சேகரிப்பதில் துணிச்சலையும், அர்ப்பணிப்பையும் அங்கீகரிக்கும் விதமாக, பாலஸ்தீன பத்திரிகையாளர் தியாகி மரியம் அபு தக்காவுக்கு 2025 ஆம் ஆண்டுக்கான “பத்திரிகை ஹீரோஸ்” விருது வழங்கப்பட்டுள்ளதாக வியன்னாவில் உள்ள சர்வதேச பத்திரிகை நிறுவனம் அறிவித்துள்ளது.

உண்மையை அறிக்கையிட்டு, வெளிக்கொணர்வதில் பத்திரிகையாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், அபாயங்களை எடுத்துரைத்து, பத்திரிகை சுதந்திரம் மற்றும் மனித உரிமைகள் மீதான விதிவிலக்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் பத்திரிகையாளர்களுக்கு இந்த விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் உலகில் எங்கும் இல்லாத ஆபத்துக்களை எதிர்கொள்வதால் இந்த விருது முக்கியமாக கருதப்படுகிறது.

எனினும் மரியம் அபு தக்கா இந்த விருதை பெற்றுக்கொள்ள, தற்போது உயிருடன் இல்லை.

அவர் தியாகியாகி விட்டார்.

Hindusthan Samachar / Durai.J