Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 அக்டோபர் (ஹி.ச.)
சென்னை மேற்க்கு தாம்பரம் ,துரைசாமி ரெட்டி தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திராவிடர் கழகம் சார்பில் தமிழ்நாடு சட்டபேரவை முன்னாள் தலைவர் முனு ஆதி அவர்களின் நூற்றாண்டு விழா மற்றும் ஆணவக் கொலைகள் தடுப்புக்கான சட்டம் இயற்ற ஆணையம் அமைத்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது,
விழாவில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையேற்று உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர்,
ஆணவனக் கொலை சட்டம் திராவிட மாடல் ஆட்சியின் முதல்வராக இருக்க கூடிய நம்முடைய முதல்வர் ஆட்சியில் 14 ங்கு நாட்களில் தீர்மானம் நிறைவேற்றபட்டதாக தெரிவித்தார்,
உயர் ஜாதி ஆதிக்கம் என்பது நம்மளை மட்டும் பாதிக்கவில்லை கடவுள் மீதும் கை வைத்து விட்டார்கள்,
இன்னமும் பெரியார் தேவைபடுகிறது திராவிட இயக்கமும் தேவைபடுகிறது,
ஏன் ஆணவக் கொலைகள் நடக்கிறது சீர்திருத்த தீர்மானங்கள்,ஜாதி திருமணங்கள்,விதவை திருமணங்கள் எல்லாம் நட்ககிறது இருந்தாலும் தமிழ்நாட்டில் ,சீர் திருத்தம் நாட்டில் ஏன் இந்த அளவிற்க்கு மிக பெரும் வாய்ப்புகள் வந்துள்ளது காரணம் ஜாதி வெறி,
ஜாதிக்கு ஏதாவது அடையாளம் உண்டா சிகப்பா இருந்தால் இந்த ஜாதி கருப்பாக இருந்தால் அந்த ஜாதி என்று கூற முடியுமா உயர் ஜாதியில் கருப்பானவர்களும்,கீழ் ஜாதியில் சிகப்பானவர்களும் உள்ளார்கள்,
ரத்த தானம் செய்பவர்கள்,மூளை சாவு அடைந்தவர்களின் உறுப்பை தானம் பெரும் போது ஜாதி,மதம்,ஏன் நாட்டை பார்கிறீர்களா,
இன்று ஜாதி வெறி தன்னுடைய வளர்த்த பிள்ளை ,ஆளாக்கிய மகள் பத்துமாசம் சுமந்து,படிக்க வைத்து அந்த பெண்ணை உருவாக்கி பெரிய கணவோடு இருக்கும் போது என்னை கேட்டு திருமணம் செய்தாயா காதல் செய்தாயா என்று உடனே கூலி பட்டாளத்தை தேடுகின்றனர்,
கூலி பட்டாளம் நமது நாட்டில் பெருகி போய்விட்டது,அரசியலில் கூலி பட்டாளம் மிக பெரிய அளவில் அதிகம் உள்ளது அதில் சந்தேகம் இல்லை,இதனால் தான் ஆணவக் கொலை செய்யபடுகிறது,
சாதி கொலைக்கு விடியல் சேர்க்கும் விதமாக ஆணவக் கொலை சட்டத்தை கொண்டு வருவதற்க்கு ஏற்பாடு செய்த முதல்வருக்கு ஆயிரம் பாராட்டுகள்,வாழ்த்துக்கள் இந்த ஆட்சியில் அதை கொண்டு வர போவதற்க்கு என்று தெரிவித்தார்.
அண்ணா அழகாக சொன்னார் பதவி என்பது மேல் துண்டு கொள்கை என்பது வேட்டி
இப்போது ரொம்ப பேருக்கு வேட்டியே இல்லை
எடுத்த உடனே முதல்வர் பதவி தான்
எம்எல்ஏ ஆக வேண்டும் எம்பி ஆக வேண்டும் செயலாளராக வேண்டும் கட்சிக்கு வர வேண்டும் என்பதெல்லாம் கிடையாது முதல்வர் தான்.
இவ்வாறு அவர் பேசினார்.
Hindusthan Samachar / Durai.J