Enter your Email Address to subscribe to our newsletters

ஜெய்பூர், 28 அக்டோபர் (ஹி.ச)
உத்திரப்பிரேதம் மாநிலத்தில் இருந்து ராஜஸ்தான் மாநிலத்தின் மனோஹர்பூர் எல்லையில் உள்ள ஒரு செங்கல் தொழிற்சாலைக்கு ஆம்னி பேருந்தில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று (அக் 28) காலை புறப்பட்டுள்ளனர். அந்த ஆம்னி பேருந்தின் மேற்கூரையில் அதிக அளவிலான பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், அப்பேருந்து மனோஹர்பூர் காவல்நிலையத்திற்கு அருகில் வரும் போது 11,000 வோல்ட் உயர் மின் அழுத்த கம்பிகள் உரசியதில் மின்சாரம் தாக்கி பேருந்து தீப்பிடித்தது. இதில் பேருந்து முழுவதும் உடனடியாக தீப்பற்றியது. தீ மளமளவென பரவியநிலையில் பேருந்து ஓட்டுனர் உடனடியாக பேருந்தை நிறுத்தியுள்ளார்.
இதையடுத்து பயணிகள் அனைவரும் பஸ்சில் இருந்து கீழே இறங்க முயற்சித்தனர். ஆனாலும், தீ மளமளவென பரவியதால் பஸ்சில் இருந்த 2 பேர் தீயில் சிக்கி உடல்கருகி உயிரிழந்தனர். மேலும், 12 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேருந்தின் மீது பொருட்கள் ஏற்றியது தொடர்பாகவும், பேருந்திற்கு முறையான ஆவணங்கள் உள்ளதா என்பது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b