Enter your Email Address to subscribe to our newsletters


கோவை, 28 அக்டோபர் (ஹி.ச.)
கோவை மாவட்டம் வால்பாறையிலுள்ள மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலங்களில் ஒன்றான அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோவிலில் இன்று சூரசம்ஹார நிகழ்வு நடைபெற்றது.
சிறப்பு பூஜைகளுக்குப் பின் முக்கிய வீதியான புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு குமரன் ரோடு காந்தி சிலை வளாகம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வந்து முருகன் சன்னிதானத்தை அடைந்தனர்.
இன்று சூரனை வதம் செய்த முருகனின் முக்கிய நிகழ்வான இந்த சூரசம் ஹாரத்தில் சாகா வரம் பெற்ற ஆனவம் கொண்ட சூரனுடைய தலையை முருகனுடைய வேலாள் குத்தி தலையை தனியாக எடுக்கப்பட்ட நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது ஆட்டம் பாட்டத்துடன் சிவாச்சாரியார்கள் பாடல்களுடனும் ஆடல்களுடனும் மிக அற்புதமான காட்சிகளை வீதிகளில் விளையாடி பக்தர்களை பரவசப்படுத்தினர்.
முருகன் சிங்கமுகத்துடன் சுற்றி வந்த சூரபத்மனை வதம் செய்த நிகழ்வு மிகவும் சிறப்பாக இருந்தது இதில் எஸ்டேட் மற்றும் வால்பாறை டவுன் பகுதியில் இருந்து சுமார் 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / V.srini Vasan