Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 28 அக்டோபர் (ஹி.ச.)
கோவை வி கே கே மேனன் சாலையில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தலைவர் அன்புமணி ராமதாஸ் மேற்கொண்டு வரும் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில்,
100 நாட்கள் நடை பயணத்தை மேற்கொண்டு இருக்கின்றேன் 90 நாட்களை எட்டியுள்ளது, தமிழகம் முழுவதும் பலதரப்பு மக்களை சந்தித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றேன். இந்தப் புரட்சி மூலம் மக்கள் விரோத ஆட்சியை, விவசாயிகள் விரோத திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதற்காக நடைப்பயணம் மேற்கொண்டு இருக்கின்றேன்
சென்னை இல்லாத ஒரு நகரில் குடியேற வேண்டும் என்று என்னை கேட்டால் நான் கோவை என்று சொல்வேன். மரியாதையான மக்கள் வசிக்கும் பகுதி, நொய்யல் தண்ணீரை குடிக்கலாம் என்று ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் இன்று இல்லை.
தமிழ்நாடு முக்கிய கட்டத்தில் இருக்கிறது மீண்டும் திமுக ஆட்சிக்கு வர வேண்டுமா? இல்லையா? என்பதை முடிவு எடுக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது. திமுக மீண்டும் ஏன் வரவேண்டும் என்பதற்கு ஒரு காரணம் கிடையாது.ஏன் வரக்கூடாது என்பதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கிறது,
100 நாள் நடைப்பயணத்தில் 90 நாட்களை முடித்து விட்டேன். இன்னும் பத்து நாட்கள் தான் இருக்கிறது. இந்த பயணத்தில் திமுக வரக்கூடாது என்ற கருத்தைத்தான் அனைவரும் சொல்கின்றனர், இன்று காலை அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை சென்றிருந்தேன்.தடுப்பு அணையில் ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடையாது. திமுகவினர் இந்தத் திட்டத்தை கிடப்பில் போட்டிருந்தனர். அப்பொழுது இது தொடர்பாக நடந்த போராட்டத்தில் நான் , அய்யா எல்லோரும் கலந்து கொண்டோம்.
நொய்யல் ஆறு சாக்கடையாக இருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்தது முதல் ஒவ்வொரு ஆறாக சாகடித்துக் கொண்டு வருகின்றனர். கூவம் ஆற்றில் நான் படகில் பயணித்து இருக்கிறேன். திமுக ஆட்சிக்கு வந்தால் ஆற்றைக் காப்பாற்ற முடியாத நபர்களாக இருக்கின்றனர். இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வரலாமா நோய்களை தடுக்கின்ற ஆறு நொய்யல் ஆறு. இன்று அதில் கை, காலை வைத்தால் சொறி,சிரங்கு வந்துவிடும். மலை அடிவாரத்தில் யானை மனிதர்கள் பிரச்சனை அதிகரிக்கின்றது. யானைகள் இருக்கும் இடத்தில் மனிதர்கள் போகின்றனர். காட்டில் அதன் வீடு இருக்கின்றது. அங்கு ஏன் நீங்கள் செல்கின்றீர்கள்?
ஆற்றில் செங்கல் சூளையை கட்டி விட்டனர். இதனால் யானைகள் வருகின்றது இதனால் பிரச்சனைகள் வரத்தான் செய்யும்
அவிநாசி அத்திக்கடவு திட்டத்தைஅதிமுக கொண்டு வந்த பொழுது இந்த திட்டம் வெற்றி பெறாது என நான் சொன்னேன். 1532 கோடி ஒதுக்கியது அதிமுக. இது பத்தாது, 3500 கோடி ஒதுக்குங்கள் என்று சொன்னேன். இன்று பவானி, நொய்யல் ஆறுகளில் தண்ணீர் போய் கொண்டிருக்கிறது. காவிரி ஆற்றில் தண்ணீர் போய்க் கொண்டிருக்கிறது. இது கடலுக்கு போய் கலக்கிறது. நீர் மேலாண்மையை பற்றி ஆட்சியாளர்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. தெரியவில்லை என்றால் விட்டு விட்டு போங்க...
அவிநாசி அத்திக்கடவு திட்டத்திற்கு இன்னும் ஒரு நான்காயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி திட்டத்தினை மேம்படுத்த வேண்டும். என்ன பெயர் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். இதை தொடர்ந்து பா.ம.க வலியுறுத்தும். நொய்யல் ஆற்றை சரி செய்ய ஒரு டாக்டரால்தான் முடியும்.
நொய்யல் ஆறு வழியை ராஜகேசரி பெருவெளி என்று கூறுவார்கள், பல்வேறு தடுப்பணைகள் கட்டப்பட்டது தற்போது அனைத்தும் நாசமாக்கப்பட்டுள்ளது கே நாசப்படுத்துவதை தவிர்த்து இவர்களுக்கு வேறு எதுவும் தெரியாது, ஜிடி நாயுடு பெயரில் மேம்பாலம் திறந்து உள்ளார்கள். ஜிடி நாயுடு என்று குறிப்பிட்டால்தான் அனைவருக்கும் தெரியும்
நரேந்திர மோடி என்பதில் மோடி என்பது ஜாதி பெயர், பிரணாப் முகர்ஜியில் முகர்ஜி என்பது ஜாதி பெயர், ராகுல் காந்தியின் காந்தி என்பது ஜாதி பெயர் மம்தா பானர்ஜியில் பானர்ஜி என்பது ஜாதி பெயர், அந்த காலத்திலிருந்து ஜாதி பெயரை வைத்து தான் ஒரு அடையாளம் என்பதை செய்தார்கள் அந்தப் பெயரை அழித்து விட்டால் மட்டும் தற்பொழுது ஜாதி என்பது அழிந்து விடுமா....?
திமுகவினர் தான் ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள ஜிடி நாயுடு சாலை பெயர் பலகையில் நாயுடு என்ற ஜாதி பெயரை கருப்பு மை கொண்டு அழித்தார்கள் தற்பொழுது அந்த பெயரிலேயே மேம்பாலம் திறந்து உள்ளார்கள்.....
சினிமாவில் வசனம் பேசினால் மட்டும் ஜாதி அழிந்து விடுமா...? தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு படிப்பு வேலை ஆகியவற்றை கொடுக்கும் பொழுது தான் அதற்கு தீர்வு காண முடியும். அறுபது ஆண்டு காலம் திமுக ஜாதியை ஒழிப்பதற்கு என்ன செய்தீர்கள்? ஜாதியை அழிக்க முடியாது ஆனால் அதற்குள் உள்ள வேற்றுமை அடக்குமுறைகள் ஆகியவற்றை தான் ஒழிக்க முடியும் அது ஒழிக்கப்பட வேண்டும். கணக்கெடுப்பு நடத்தி அதனை செய்ய வேண்டும் ஆனால் கணக்கெடுப்பு நடத்துவதற்கே பயப்படுகிறீர்கள்...
கொங்கு பகுதியில் திமுகவில் யார் மாவட்ட செயலாளர்களாக இருக்கிறார்கள்? எந்த சமூகத்தை சார்ந்தவர்கள் அதிகமாக இருக்கிறார்களோ அவர்களுக்கு தானே திமுகவில் பொறுப்பு கொடுக்கிறீர்கள், எம் எல் ஏ, எம் பி சீட்டுகள் வழங்கப்படுகிறது, இப்படி இருக்கும் பொழுது எப்படி ஜாதி இல்லை என்று நீங்கள்(திமுக) பேசுவீர்கள். பின் தங்கிய சமூகத்தினரை முன்னுள்ள சமூகத்தினருக்கு இணையாக முன்னேற்றுவதுதான் சமூக நீதி. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு அதிகாரம் இருந்தும் அதிகாரம் இல்லை என்று முதல்வர் பொய் கூறி வருகிறார். சாதிவாரி கணக்கெடுப்பு என்ற சொல் பிடிக்கவில்லை என்றால் சமூக நீதி கணக்கெடுப்பு என்று பெயரை மாற்றிக் கொள்ளுங்கள், அதுவும் பிடிக்கவில்லை என்றால் கலைஞர் கணக்கெடுப்பு என்று பெயரை மாற்றிக் கொள்ளுங்கள். ஆட்சியில் தனது மக்கள் எந்த நிலைமையில் இருக்கிறார்கள் என்று தெரிவதற்கு கூட துப்பில்லாத ஆட்சி தான் இந்த திமுக ஆட்சி. நான் மட்டும் முதல்வராக இருந்தால் தமிழ்நாட்டில் எட்டு கோடி மக்கள் என்ன நிலைமையில் இருக்கிறார்கள் யாரெல்லாம் படித்துள்ளார்கள் யாரெல்லாம் படிக்காமல் இருக்கிறார்கள் யாருக்கெல்லாம் வேலை இல்லை வீடு இல்லை தொழிலில் எவ்வாறு இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வதில் தான் நான் ஆசைப்படுவேன். 500 கோடி மதிப்பில் 3 லட்சம் அரசு ஊழியர்களை வைத்து இரண்டு மாதத்தில் கணக்கெடுப்பு நடத்தி விடலாம்....
சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என்றால் இட ஒதுக்கீட்டை கொடுத்து விட்டால் மட்டும் போதாது
இட ஒதுக்கீடு கொடுத்தால் அது யாருக்கு கிடைக்கவில்லையோ அவர்களுக்கு உள் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும்
அனைத்து பஞ்சாயத்துகளிலும் எத்தனை வீடுகள் உள்ளது எந்தெந்த ஜாதியினர் உள்ளனர் யார் யாருக்கு ஓட்டு போடுவார்கள் என்று அனைத்து விவரங்களையும் வைத்துள்ளார்கள்
இந்த விவரங்கள் அனைத்தும் தேர்தலுக்காக வைத்துள்ளார்கள் தேர்தல் நேரத்தில் காசு கொடுப்பதற்காகவே இதனை வைத்துள்ளார்கள்
தேர்தல் நேரத்தில் இரவு ஒரு மணிக்கு மின்சாரத்தை தடை செய்தால் காசு கொடுக்கிறார்கள் என்றுதான் அர்த்தம்
விஞ்ஞான ரீதியில் திமுகவை யாராலும் மிஞ்ச முடியாது
காலங்காலமாக காசு கொடுப்பது தான் நடந்து வருகிறது
இதனால்தான் இந்த திமுக ஆட்சிக்கு வருகிறது
கோவை என்பது மிகப்பெரிய தொழில் நகரம் ஆனால் தற்பொழுது 12000 தொழிற்சாலைகளை மூடி உள்ளார்கள்
தமிழகம் முழுவதும் 63 ஆயிரம் தொழிற்சாலைகளை முடிவு உள்ளார்கள் இதற்கெல்லாம் காரணம் மின்சார கட்டணத்தை உயர்த்திவிட்டது தான்
இதைத் தவிர்த்து அமெரிக்காவிலும் வரியை உயர்த்தி விட்டார்கள்
தீபாவளிக்கு டாஸ்மாக்கில் மற்றும் 750 கோடி ரூபாய் வருமானம் வர பெற்றுள்ளது
தமிழ்நாடு எங்கே செல்கிறது?
அண்ணா ஆட்சி காலத்தில் தமிழ்நாடு நன்றாக இருந்தது, நல்ல நிர்வாகம் இருந்தது நேர்மையான நிர்வாகத்தை அண்ணா செய்தார்
ஒரு சொட்டு சாராயத்தை கூட அண்ணா தமிழ்நாட்டிற்குள் விடவில்லை
ஆனால் கலைஞர் ஆட்சிக்கு வந்தவுடன் சாராயக்கடைகள் திறக்கப்பட்டன அன்றைக்கு திறக்கப்பட்ட சாராயக்கடைகள் தான் மூன்று தலைமுறைகளாக தற்பொழுதும் நாசப்படுத்தி வருகிறது
ஸ்டாலின் ஒரு படி மேலே சென்று மது கடைகள் ஒரு பக்கம் இருந்தால் கஞ்சா ஒரு பக்கம் இருக்கிறது கூடிய விரைவில் கஞ்சா கடைகளும் வரலாம்
அமெரிக்காவில் கிடைக்காத போதை பொருட்கள் கூட இங்கே கிடைக்கிறது
நாம் அடுத்த தலைமுறையை காப்பாற்ற வேண்டும்
தலைமுறைகளை காப்பாற்ற வேண்டும் என்பதுதான் என்னுடைய பயணம்
திமுகவினருக்கு இந்த பகுதியில் ஒரு தியாகி இருக்கிறார் அவர் 471 நாட்கள் சிறை சென்று வந்தவர் அவர்தான் இந்த பகுதிக்கு பொறுப்பாளர்
கொங்கு பகுதி மக்களே திமுகவை மறுபடியும் தேர்வு செய்யாதீர்கள் திமுகவிற்கு தயவு செய்து வாக்களிக்காதீர்கள்
இந்தியாவில் ஒரே ஒரு மாநிலத்தில் தான் தாய் மொழியை கற்றுக் கொள்ளாமல் பட்டம் வாங்கலாம், அது பெருமைக்குரிய தமிழ்நாடு தான், இது எவ்வளவு கேவலமான ஒன்று
தமிழ் தான் எங்கள் உயிர் மூச்சு என்று வசனம் பேசி பேசி ஆட்சிக்கு வந்த திமுக தற்பொழுது அவர்களது ஆட்சியில் பள்ளிக்கூடங்களில் தமிழ் என்பது கட்டாய பாடமாக கூட இல்லை
ஏமாந்தது எல்லாம் போதும் எத்தனை நாட்கள் மக்கள் நீங்கள் எல்லாம் ஏமாளிகளாகவே இருப்பீர்கள்
எங்களைப் போன்றவர்கள் ஆதரவு கொடுங்கள் உங்களுக்கு தர வேண்டும் என்று பல்வேறு திட்டங்களை நாங்கள் வைத்துள்ளோம்
ஈரோடு மஞ்சள் புவிசார் குறியீடு பெற்றது, நான் மட்டும் முதல்வராக இருந்திருந்தால் ஈரோட்டு மஞ்சளை உலகம் முழுவதும் பிரபலப்படுத்தி இருப்பேன்
கேன்சரை குணப்படுத்தும் தன்மை கொண்ட மஞ்சள் நம்முடைய கொங்கு பகுதியில் ஈரோட்டில் உள்ளது
ஆனால் இதைப் பற்றி பேசுவதற்கு கூட தகுதி இல்லாதவர்கள் தான் நாட்டை ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள்
மஞ்சள் விவசாயிகள் குறைந்தபட்ச ஆதார விலையை தான் கேட்கிறார்கள்
டெல்டா பகுதியில் நெல்லை பாதுகாப்பாக வைப்பதற்கு அடிப்படை கட்டுமானங்கள் கூட இல்லை ஆனால் நானும் டெலிட் தான் காரன் என்று முதல்வர் கூறிக் கொள்கிறார்
லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் நீரில் அழுகி கிடப்பதற்கு காரணம் யார் என்றால் திமுக முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான்
அண்ணா பெரியார் வாரிசு என்று கூறிக் கொள்வார்கள் அவர்களின் பெயரை சொல்வதற்கு கூட உங்களுக்கு தகுதி இல்லை
அவர்கள் சமூக நீதிக்கு பாடுபட்டவர்கள் நீங்கள் சமூக நீதியை குழி தோண்டி புதைத்தவர்கள்
சமூக நீதி வேண்டுமென்றால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதை வைகோ திருமாவளவன் செல்வப் பெருந்தகை ஆகியோரெல்லாம் கேட்கலாம் அல்லவா
தந்தை பெரியாரின் வாரிசு நான் தான் என்று மாறு தட்டிக் கொள்ளும் வீரமணி ஏன் முதலமைச்சருக்கு அழுத்தம் கொடுக்கவில்லை
வெள்ளைக்காரர்கள் ஆட்சி காலத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி தான் தற்பொழுதும் இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டு வருகிறது
இன்று நவீன முறையில் கணக்கெடுப்பு நடத்திய அடுத்த ஐம்பது ஆண்டு காலம் அதனை செயல்படுத்த வேண்டும்
கொங்குநாடு மக்கள் கட்சியின் தலைவர் ஈஸ்வரன் ஏன் கணக்கெடுப்பு நடத்துவதை வலியுறுத்துவதில்லை
கூட்டணி கட்சியில் இருப்பவர்கள் எல்லாம் ஏன் இதைப் பற்றி வாய்ந்திருக்க மறுக்கிறீர்கள் உங்களுக்கெல்லாம் தேர்தல் காய்ச்சல் வந்து விட்டதா
பெண்கள் எல்லாம் வெளியில் சென்று வீட்டிற்கு வரும் வரை அம்மாக்கள் பயப்படுகிறார்கள், அதற்கெல்லாம் காரணம் கஞ்சாவை பயன்படுத்தி மிருகங்களாக மாறி வருவது தான்
கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் எத்தனையோ கோடி செலவழிக்கப்பட்டது ஆனால் எங்கு பார்த்தாலும் சாலைகள் குண்டும் குழியுமாய் காட்சியளிக்கிறது
விஞ்ஞான ஊழலில் திமுகவை மிஞ்சுவதற்கு யாரும் இல்லை பொய் கூறுவதற்கும் திமுகவை போல் யாரும் இல்லை
11 லட்சம் கோடிக்கும் மேல் தொழில் முதலீடு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது என்று முதல்வர் பேசியது பற்றி முதல்வர் கூறியதற்கு வெள்ளை அறிக்கை நான் கேட்டேன்
அதற்கெல்லாம் பழக்கம் இல்லை என்று முதல்வர் கூறுகிறார்
முதலீடு எல்லாம் ஒன்று மாறவில்லை புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மட்டுமே போடப்பட்டுள்ளது
99 விழுக்காடு தேர்தல் வாக்குறுதிகளின் நிறைவேற்றி விட்டோம் என்று முதல்வர் கூறுகிறார், ஒரு அமைச்சரும் ஒவ்வொரு விழுக்காடுகளை கூறுகிறார்கள்
பிறகுதான் விடியல் எங்கே? என்று ஒரு புத்தகத்தை வெளியிட்டேன் இதில் திமுக அரசு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் உள்ளது, அதில் நிறைவேற்றப்பட்ட 66 வாக்குறுதிகள் மட்டுமே உள்ளது
இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு தப்பி தவறி வந்து விட்டால் அவ்வளவுதான்
தமிழ்நாடு என்ற பெயரை கஞ்சா நாடு என்று மாற்றி விடலாம், கஞ்சாவை ரேஷன் கடையிலேயே விற்பதற்கு ஆரம்பித்து விடுவார்கள்
இதையெல்லாம் உங்களுக்கு எடுத்து கூறத்தான் ஒவ்வொரு பகுதியாக சென்று கொண்டிருக்கிறேன்
உங்களிடம் நான் ஓட்டு கேட்டு வரவில்லை, வருகின்ற தேர்தலில் யார் வரக்கூடாது யார் வரவேண்டும் என்று முடிவு எடுங்கள்
திமுக ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் திமுகவை அகற்ற வேண்டும் என்றால் அனைவரும் ஒன்று சேர வேண்டும்
திமுகவை அகற்றுவோம் நம்முடைய உரிமைகளை மீட்டு எடுப்போம்.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் பேசினார்.
Hindusthan Samachar / V.srini Vasan