Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 அக்டோபர் (ஹி.ச.)
இன்று காலை 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1200 குறைந்து, சவரன் தங்கம் ரூ.90,400 க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.150 குறைந்து ரூ.11,300 க்கு விற்பனை செய்யப்பட்டது.
வெள்ளி விலை ரூ.5,000 குறைந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.1,65,000 க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் நண்பகலில் அதிரடியாக குறைந்துள்ளது.
அதன்படி 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.225 குறைந்து, கிராம் தங்கம் ரூ.11,075 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.1,800 குறைந்து, ஒரு சவரன் ரூ.88,600 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையை பொறுத்தவரையில் எந்த வித மாற்றமுமின்றி ஒரு கிலோ வெள்ளி ரூ.1,65,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்று ஒரேநாளில் தங்கத்தின் விலை ரூ.3,000 குறைந்துள்ளது நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 10 நாட்களில் மட்டும் தங்கத்தின் விலையானது ரூ .7,000 சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது
Hindusthan Samachar / P YUVARAJ