ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்களை, பொதுத்துறை நிறுவனங்களாக மாற்றும் மத்திய அரசின் கொள்கை முடிவை எதிர்த்து வழக்கு - தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவு
சென்னை, 28 அக்டோபர் (ஹி.ச.) ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்களை, பொதுத்துறை நிறுவனங்களாக மாற்றும் மத்திய அரசின் கொள்கை முடிவை எதிர்த்த வழக்கு தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்களை பொதுத்துறை நிறுவனங்
High


சென்னை, 28 அக்டோபர் (ஹி.ச.)

ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்களை, பொதுத்துறை நிறுவனங்களாக மாற்றும் மத்திய அரசின் கொள்கை முடிவை எதிர்த்த வழக்கு தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்களை பொதுத்துறை நிறுவனங்களாக மாற்ற ஒப்புதல் அளித்த மத்திய அமைச்சரவை அறிவிப்பை எதிர்த்து, அகில இந்திய ராணுவ தளவாட உற்பத்தி நிறுவன தொழிலாளர்கள் கூட்டமைப்பு வழக்கு தொடர்ந்திருந்தனர்.

நாட்டின் பாதுகாப்புக்காக மத்திய அரசு, முக்கிய கொள்கை முடிவை எடுத்துள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கொள்கை முடிவுகளை முடக்கும் வகையிலான எதிர்ப்புகளை ஏற்க முடியாது எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆயுதங்கள் உற்பத்தி செய்ய வேண்டிய நிலையில், தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால், அரசு அவசர முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியம் எனவும் உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ