Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 அக்டோபர் (ஹி.ச.)
சென்னை மாவட்டம் திரு.வி.க. நகர் எம்.எல்.ஏ.தாயகம் கவியின் தாயார் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது,
திரு.வி.க. நகர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மற்றும் தி.மு.க.வின் துணை அமைப்பு செயலாளரான தாயகம் கவியின் தாயார் ப.சவுந்தரி அம்மையார் உயிரிழந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன்.
கழகத்தின் கருப்பு சிவப்பு உணர்வுள்ள உறுதியான பெண்மணியாக விளங்கிய அவர், 97 வயதிலும் முரசொலியை நாள்தோறும் படித்து வந்தார் என்று அறிந்தபோது சிலிர்த்தது.
கொள்கை உரமூட்டி வளர்த்த அன்பு தாயை இழந்து தவிக்கும் தம்பி தாயகம் கவிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும்
ஆறுதலையும் தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Hindusthan Samachar / vidya.b