கோவை மாநகராட்சி வார்டு சிறப்புக் கூட்டம் - பொதுமக்களின் குறைகள் கேட்கப்பட்டது
கோவை, 28 அக்டோபர் (ஹி.ச.) கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சிறப்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு, பொதுமக்களின் குறைகள் கேட்கப்பட்டு வருகின்றது. அதன்படி, கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட 52 வது வார்டு கண்டியப்பா திருமண மண்டபத்தில் வார
Coimbatore Corporation ward special meeting – Public grievances were heard.


கோவை, 28 அக்டோபர் (ஹி.ச.)

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சிறப்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு, பொதுமக்களின் குறைகள் கேட்கப்பட்டு வருகின்றது. அதன்படி, கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட 52 வது வார்டு கண்டியப்பா திருமண மண்டபத்தில் வார்டு சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.

இதில், பொதுமக்களின் குறைகள் கேட்கப்பட்டு அதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

உதவி ஆணையாளர் இராம்குமார் முன்னிலையில் நடைபெற்ற இந்த வார்டு சிறப்பு கூட்டத்தில், கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், திமுக தீர்மானக்குழு செயலாளருமான நா.கார்த்திக், பொதுக்குழு உறுப்பினர் இரா.மணிகண்டன், வட்டக்கழக செயலாளர் நாராயணன், 53 வது வார்டு மாமன்ற உறுப்பினர் மோகன், சுமித் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர்.மயில்சாமி மற்றும் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Hindusthan Samachar / V.srini Vasan