Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 அக்டோபர் (ஹி.ச.)
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து த.வெ.க., தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, தன் எக்ஸ் தளத்தில், “அரசின் அடக்குமுறைக்கு எதிராக இலங்கை, நோபாளம் நாடுகளில் நடந்ததுபோல, தமிழ்நாட்டிலும் புரட்சி ஏற்படும்” என எச்சரிக்கை செய்திருந்தார்.
இதனை தொடர்ந்து ஆதவ் அர்ஜூனா மீது கலவரத்தை தூண்டி, பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துகிறார் என்று போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் ஆதவ் அர்ஜூனா மனு தாக்கல் செய்துள்ளார்.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட இந்த மனு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
வழக்குகளை ரத்து செய்யக்கோரும் மனுக்களை விசாரிக்கும் நீதிபதி (ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா) முன்பு இந்த வழக்கை வருகிற நவம்பர் 5-ந்தேதி விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b